Sunday Jun 30, 2024

ஸ்ரீ இராமலிங்கஈஸ்வரர்

பித்ரு சாபம் நீங்கி    பெரும் செல்வம் பெற

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் மாரங்கியூர்  கிராமத்தில் தென் பெண்ணை நதிக்கரையில் எழுந்தருளி லோக ஷேமத்திற்காக அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனாய ஸ்ரீ இராமலிங்கஈஸ்வரர் .

ஒரு முறை இராமபிரான் அன்னை சீதா தேவியைத் தேடி தென்திசை ( ராமேஸ்வரம் ) சென்றபோது மானசீகமாக சிவபெருமானை மனதிலே தியானித்தார், அப்போது சிவபெருமான் அவர் முன் சுயம்புலிங்கமாக காட்சி தந்தார், அந்த லிங்கத்தை ராமபிரான் பூஜித்தார், இந்த இடத்திலேயே தந்தைக்கு பித்ருபூஜையையும் செய்தார். ( நதிக்கரையில் அமைந்த புண்ணிய ஷேத்திரம் என்பதால் இன்றும் அமாவாசை நாளில் ஏராளமானோர் இங்கு வந்து பித்ருபூஜை செய்கிறார்கள். பித்ரு சாபம் நீங்கி பலனடைகிறார்கள்) சிறப்புமிக்க அந்த ஆலயம் தான் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வரும் மாரங்கியூர் ஸ்ரீ பர்வத வர்த்தினி சமேத ஸ்ரீ இராமலிங்கேஷ்வரர் ஆலயம், ராமர் வழிபட்டுச் சென்ற பின் பிற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் ஆலயம் எழுப்பினார்கள் குலோத்துங்கச் சோழன் முதற்கொண்டு பல சோழ சக்கரவர்த்திகள் தீபம் ஏற்றவும் , நித்ய வழிபாட்டுக்காகவும் கோ தானம், பூமி தானம் வழங்கியதற்கான கல்வெட்டுக்கள் ஏராளமாக உள்ளது. ஆலயத்தில் சுவாமி அம்பாள், வினாயகர், முருகர், சப்த மாதாக்கள், பிட் ஷாடனர் , சூரியன், சந்திரன், அனைத்து விக்ரகங்களும் உள்ளது. இங்குள்ள துர்க்கை மான், சிங்கம் ஆகியவற்றுடன் இருப்பது அபூர்வமானது, திருவாரூர், திருவானைக்காவில் உள்ளது போல் மூத்ததேவி(மூதேவி) யான ஜேஷ்டா தேவி இங்கு தாமரையில் வீற்றிருப்பது மிகவும் சிறப்பு, மன்னர் பெருமான் அமைத்த ஆலயம் சிதலமடைந்ததால் திருவிஜயராஜ் என்பவர் ஊர் மக்கள் மற்றும் கொடையுள்ளம் கொண்ட சிவனடியார்களின் உதவியுடன் ஏற்கனவே இருந்த கற்களைக் கொண்டே ஆலயத்தை புதுப்பிக்கத் தொடங்கி 80 சதவிகித பணியை நிறைவுசெய்திருப்பது பரம்பொருளின் பெருங்கருணை, இன்னும் 

 வண்ணமடித்தல், தரை அமைத்தல் போன்ற பணிகள் பாக்கியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கு முக்கிய காரணம் பித்ரு சாபம் இந்த ஆலய திருப்பணிக்கு சிறு துரும்பளவு உதவினால் கூட வானளவு உள்ள பித்ரு சாபம் விலகி வாழ்வில் வசந்தம் உண்டாகும், வியாபாரம் விருத்தியாகும், வருமானம் பெருகும், பதவி உயர்வு கிட்டும், இன்றே இயன்றளவு உதவிப் பாருங்கள் உண்மையை நீங்களே உணருவீர்கள்.

தொடர்புக்கு: 9751972202/ 9159428289/944566 1037,

Bank details

SRI RAMALINGAESWARAR Trust

AC/no 310500301000029

Vijaya Bank (Bank of Baroda)

Customer ID 110976632

IFSC code VIJB 0003105

Marangiyur .Villupuram 607203.

  

ஓம் நமசிவாய

ஓம் நமோ நாராயணாய

ஜெய ஜெய சங்கரா

ஹர ஹர சங்கரா

சிவ சிவ சங்கரா

குரு குரு சங்கரா

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top