Monday Jan 27, 2025

1000 ஆண்டு பழமையான சிவன்

அராஜகத்தின்_உச்சம் 

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் வீடாக மாறியதை கண்டு கொள்ளாத தமிழகத்தின் அவமானச் சின்னமான இந்து சமய அறநிலையத் துறை 

இதுவரை கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைத்தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்போது, கோயிலையே ஆக்கிரமித்து வீடாக மாற்ற இந்து அறநிலையத் துறை அனுமதித்து உள்ளது.

தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ்மிக்க தஞ்சாவூரில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

தஞ்சை மாநகரம், தெற்கு அலங்கம், தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள 1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலை வீடாக மாற்றி உள்ளனர் 

உயர்ந்து நின்ற கோபுரம் குட்டிச்சுவர் ஆகவும், கலையம்சம் பொருந்திய சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் சிதிலமடைந்தும், மறைக்கப்படும் சிதைக்கப்பட்டும் இருக்கின்றன

துவாரபாலகர்கள் ஆக இருந்து கோயிலை பாதுகாத்து வந்த துவாரபாலகர்கள், இப்போது இவனுடைய வீட்டிற்கு வாயிற்காவலர்களாக இருக்கிறார்கள்.

பிள்ளையார், சந்திரன், சூரியன் போன்ற கலையம்சம் பொருந்திய கற்சிற்பங்கள் எல்லாம் கண் முன்னாடி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது 

கொடுமையிலும் கொடுமை என்னவெனில், இதை ஒரு தவறாகவே பொருட்படுத்தாமல் இந்து அறநிலையத்துறை அனுமதித்ததுதான்.

இதுவரை, இந்து கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு, இந்து அறநிலையத்துறை துணை போனது. இப்போது சிவன் கோயிலையே ஆக்கிரமிக்க அனுமதித்து உள்ளனர்.

இவர்களுக்கு ஒன்று தெரியாமல் போய்விட்டது, “சிவன் சொத்து, குல நாசம்”.

சிவன் கோயிலை ஆக்கிரமித்து வீடாக மாற்றியுள்ளனர். இந்த வீட்டிற்கு மின்சாரத்துறை எப்படி மின்சாரம் வழங்கியது என்பது மில்லியன் டாலர் கேள்வி..

தமிழக அரசு உடனடியாக இந்த திருக்கோயிலை மீட்டு மீண்டும் வழிபாட்டுக்குரிய திருக்கோயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதை ஆக்கிரமித்தவர் யார் 

அதற்கு துணைபோன அறநிலைய துறை அதிகாரிகள் யார் யார்? போன்றவை குறித்து விரிவான விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர் பார்ப்பு.

அதோடு தமிழகம் முழுவதும் இதுபோல இந்து கோயில் சொத்துக்களை தாரை வார்த்த அறநிலையத் துறை அதிகாரிகளை உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பக்தர்கள் வைக்கும் வேண்டுகோளாகும்.

CAN THIS HAPPEN IN ANY OTHER RELIGION ANYWHERE IN THE WORLD?

Under Government control an ancient Shiva Temple of 1000 YEARS HISTORY is blatantly converted as a house in TANJORE

TIME FOR CENTRAL GOVERNMENT TO TAKE OVER ALL HINDU TEMPLES

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top