சாரா பிராதி மாதா (பத்ரகாளி) மந்திர், இமாச்சலப்பிரதேசம்
முகவரி
சாரா பிராதி மாதா (பத்ரகாளி) மந்திர், சாரா சாலை, சில்காரி, பாட், இமாச்சலப்பிரதேசம் – 176216
இறைவன்
இறைவி: பத்ரகாளி (பார்வதி)
அறிமுகம்
ஹிமாச்சலப்பிரதேசத்தில் காங்க்ரா மாவட்டத்தில் தர்மஸ்தலாவுக்கு அருகில் உள்ள சாராவில் உள்ள பத்ரகாளி கோயில் 1905 இல் நிலநடுக்கத்தில் சேதமடைந்தது. இந்தக் கோயில் INTACH (கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை) மூலம் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் கோவிலின் சில பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கோவில் சக்தி தேவியின் பத்ரகாளியின் வெளிப்பாடாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் பழைய இந்து கோவில் கட்டிடக்கலையின் ஷிகர் பாணியில் இருந்தது. இக்கோயிலின் கட்டிடக்கலை சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களை ஒத்திருந்தது. கோயிலைக் கட்டியவர் யார் என்பது குறித்து உறுதியான கோட்பாடு எதுவும் இல்லை என்றாலும், உள்ளூர்வாசிகள் கோயில் தெய்வத்தை தங்களின் “குலதேவி” என்று கருதுகின்றனர், 450 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியின் சாய்ந்த கோவிலாக இது திகழ்கிறது – தரம்ஷாலாவிற்கு அருகிலுள்ள சாராவில் உள்ள பிரபலமான உள்ளூர் தெய்வமாக இக்கோவில் உள்ளது.
காலம்
450 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
காங்க்ரா மந்திர் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
ஜுப்பர்ஹட்டி