கீராளத்தூர் மடப்புரம் விளமநாதர் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightuptemples.com/wp-content/uploads/2023/06/351187693_771530644678725_2718600344977076431_n.jpg)
முகவரி :
கீராளத்தூர் மடப்புரம் விளமநாதர் சிவன்கோயில்,
14. கீராளத்தூர் மடப்புரம், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610205.
இறைவன்:
விளமநாதர்
இறைவி:
பெரியநாயகி
அறிமுகம்:
திருவாரூர் திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில், ‘நெல்லிக்கா’ என்று கைகாட்டி உள்ள திசையில் திரும்பி, ‘திருநெல்லிக்கா’ சென்று, அங்கிருந்து அருகாமையிலுள்ள ‘தெங்கூர்’ சென்று, அங்கிருந்து ‘கொள்ளிக்காடு’ செல்லும் பாதையில் 5 கி.மீ. சென்றால் கீராலத்தூர் என்னும் கிராமத்தை அடையலாம் தற்போது கீராளத்தூர் / கீராலத்தூர் எனப்படுகிறது. பல கீராளத்தூர்கள் உள்ளதால் 14.கீராளத்தூர் எனப்படுகிறது. இந்த ஊராட்சியில் உள்ள மூன்று ஊர்கள் மடப்புரம், திருக்கொள்ளிக்காடு, கீராளத்தூர். இதில் இக்கோயில் இருக்குமிடம் மடப்புரம் எனும் சிற்றூர் இதனை கீராளத்தூர்-மடப்புரம் என்கின்றனர். மடம் வைத்து அடியார்களுக்கு உணவு அளித்த மடம் இருந்த தலம் எனபதால் மடப்புரம் ஆனது.
இறைவன்- விளமநாதர் இறைவி- பெரியநாயகி அக்னி தீர்த்தம் அருகில் உள்ள குளம் தலமரம் புரசுமரம் (பலாசம்) பன்னெடுங்காலமாக சிதைவடைந்து இருந்த இக்கோயிலை ஊர் மக்களும் வெளியூர் அன்பர்களும் சேர்ந்து 2018 திருப்பணி செய்து விநாயகர் சன்னதி முருகன் சன்னதி காலபைரவர் சன்னதி மற்றும் மகா மண்டபம் புதிதாக சேர்த்து கட்டி குடமுழுக்கும் கண்டனர்.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும், அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். இறைவனுக்கு விதானம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உள்ளது சிறப்பு. இறைவன் முன்னர் உயர்ந்த மகாமண்டபம் ஒன்று ஆறு தூண்கள் கொண்ட கான்கிரீட் மண்டபமாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தின் வெளியில் இறைவனை நோக்கிய ஒரு நந்தி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கருவறை கோட்டங்கள் என ஏதும் இல்லை. தென்புறம் ஒரு தக்ஷணமூர்த்தி சிலை சுவரோடு ஒட்டியபடி உள்ளது. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் முருகன் மகாலட்சுமி மூவருக்கும் கட்டப்பட்டு உள்ளன. சண்டேசர் பழமையானவர் பார்க்க அழகான வடிவில் உள்ளார். வடக்கில் ஒரு பழமையான வேப்பமரத்தினை அம்பிகையாக பாவித்து வழிபாடு நடப்பதை காணமுடிகிறது. வடகிழக்கில் மேற்கு நோக்கிய பைரவர் சிற்றாலயம் உள்ளது.
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/349118120_1035845071156582_8908422596603285179_n-1-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351018942_1290175995211595_3386785985025326416_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351108019_109291075513305_7165285561973161523_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351108192_6289191291136822_5536008969914904945_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351109099_571092021815836_601324536984724811_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351112726_6316671688368892_1073890781813108603_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351116900_162974449924879_7097393512180682871_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351118150_1406957406764693_7664672742909740501_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351124053_561563722832854_4964514057132147118_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351125031_3249997638479841_5308732859606684554_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351139741_175157502145931_1291692950292113196_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/351155388_212174794507903_8617831145230239299_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீராளத்தூர் மடப்புரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி