Thursday Jan 23, 2025

500 டன் கோயில் தங்கமும் இந்திய பொருளாதாரமும்!

அனுப்புநர்:

 P.S.கனகராஜ்.

(தலைவர்)

தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும்  கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.

 பெறுநர்:

ஆணையாளர் அவர்கள்.

இந்து சமய அறநிலையத்துறை.

நுங்கம்பாக்கம்.

சென்னை : 34.

ஐயா;

                         500 டன் கோயில் தங்கமும் இந்திய பொருளாதாரமும்! 

கோயில் நகைகளை உருக்கி அதை வங்கியில் வைக்கப்போவதாக தமிழக அரசு கூறியது, அதை எதிர்த்து நீதி மன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தபோது, இது புதிய வழக்கமல்ல 1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது, அதன் மூலம் இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு அது வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதன்மூலம் அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும் அரசு நீதி மன்றத்தில் சொல்லியது.  அதாவது ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு  ₹37,50,000 என்றால 500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி. 

இந்த தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கியில் அடகுவைத்தால் அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம். அப்படி வைக்கும்போது குறைந்த பட்ச வட்டியாக 4% வட்டியை  ரிசர்வ் வங்கி கொடுத்தால் வருடத்திற்கு ₹7500 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்படி வந்தால் அதை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும் சில ஆண்டுகளில் முழுதும் பழுதுபார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிட முடியும். அதாவது ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது 50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசு, இந்துக்களுக்கு அவர்கள் திருவிழாவின் போது வாழ்த்துக்கூட சொல்வதில்லை. 

சரி, இதே பணத்தை மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகிவிடும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?

சரி, தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரப்பட்டு இதை தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது?

மத்திய அரசு கோயில் விவகாரங்களில் அரசு நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது. அப்படி அது வரும்போது கோயில்   சொத்துக்களில் அரசாங்கம் கைவைக்க முடியாமல் போய்விடும். அப்படியெனில் அந்த நகைகளை எதுவும் செய்ய முடியாது என்றாகிவிடும்.

இருந்தாலும் அரசு தங்கமாக மாற்றி அதை வங்கியில்தானே வைக்கிறது? அப்போது அதில் என்ன பிரச்சினை? 

தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தன் செய்வான் என்று 1970 களிலேயே சொன்ன அரசனின் வாரிசுகள்  மீதி தங்கம் என்ன வரும் என்பதை நம்மில் பலர் யோசனை செய்வதே இல்லை? அவர்கள் சொல்லும் 500 டன் நகை என்றால் குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கைநழுவி சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் என்பது தெரியாதா?

இந்த திராவிட அரசு மாற்றியது போக மீதமிருக்கும் கோயில்களாவது இருக்குமா?  சந்தேகமே, ஏனெனில் இந்த கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை இன்றுவரை நம்மில் பலர் உணரவில்லை, அப்படியெனில் இந்த  திராவிட அரசுகள் வைக்கப்போகும் மீதியென்பது வெறும் சுவர்களும் கோபுரங்களுமே, அதுவும் பாழடைந்த நிலையில்..

அதற்கு காரணம் தவறான அரசல்ல, புரிந்துகொள்ளாத  இந்துக்கள்!???

மொகலாயர்கள், பிரிட்டிஷ் அரசு திருடியதைவிட   திராவிட அரசுகள் சுவைத்தது அதிகமே..

எனக்கெதற்கு ஊர் வம்பு என்று தூங்குவதுபோல நடிக்கும் இந்துக்களே..  நடித்ததுபோதும் விழித்துப்பாருங்கள்..

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள கோவில்களில்*

பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர் உட்பட அனைத்து அலுவலர்களையும்  இந்து சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி

வழக்கறிஞர் எஸ். ஸ்ரீதரன் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செயதார்.

இவ்வழக்கில் ஆணையர்., உதவி ஆணையர்கள் வரையுள்ள அதிகாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு வாதிட்டது.

அரசாங்கத்தின் வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

தமிழகம் முழுவதும் 44,121 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.

1961 ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் 2-ல் கூறியுள்ள

இந்து மதத்தை பின்பற்றுவதை சத்தியபிரமாணத்தின் பேரில் உறுதி கூறும்

நிரூபண படிவத்தில் விதி 3ன் படி கோயில்களில் பணிபுரிவர் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை சத்தியபிரமாணம் செய்து

சாட்சிகள் முன்னிலையில் உறுதி செய்யவும்

HR & CE சட்டத்தின் பிரிவு 10 ஐ மேற்கோள் காட்டியும்,

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்.,

மாண்புமிகு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்

மார்ச் 3 ம் தேதி 2020 தீர்ப்பளித்திருந்தனர். அதன்படி, இதுவரை சத்தியபிரமாணம் செய்யாத ஆணையர், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட துறையில் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும்

தாங்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், தாங்கள் தொடர்ந்து இந்து மதத்தையே பின்பற்றுவதாகவும்

சத்தியப் பிரமாணம் செய்து உறுதிமொழி படிவத்தில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்து போட வேண்டும்,

தவறும் பட்சத்தில் அவர்கள் பதவி இழப்பர்.

உத்தரவு கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க,

இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து ஊழியர்களும்

அவர்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், அவர்கள் இப்போதும் இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்  என்றும்

சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.

இதில் இந்து மதத்தை பின்பற்றாத

மாற்று மத அலுவலர்கள் சத்தியபிரமாணம் செய்ய முடியாது என்பதை இந்து சொந்தங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த செய்தியை நம் இந்து சொந்தங்கள் இருக்கும் எல்லா வாட்ஸ் அப்., ஃபேஸ்புக்., மற்றும் அனைத்து சோஷியல் மீடியா குழுக்களிலும் பகிரவும்.

வந்ததை பகிரவும்

ஒரு இந்துவாய் நம்மால் இது கூட செய்ய முடியாதா??

தயவு செய்து அனைவரும் தங்கள் நட்பில் உள்ள அனைவருக்கும் பகிருங்கள்…

 இப்படிக்கு

P.S.கனகராஜ்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top