ஸ்ரீ பார்ஸ்வநாதர் சமண கோவில், அரக்கோணம்
முகவரி
ஸ்ரீ பார்ஸ்வநாதர் சமண கோவில், காவனூர், அரக்கோணம் – 631004.
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர்
அறிமுகம்
காவனூர் என்னும் ஊரில் உள்ள சமணக் கோவில் அரக்கோணம் அருகில் வடக்கு திசையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமணம் தழைத்தோங்கி இருந்தமைக்கு சான்றாக சிதிலமடைந்த ஒரு சமணக்கோவில் உள்ளது. முழுமையாக இருந்து தற்போது முன் பகுதிகள் மற்றும் கருவறை மட்டும் தனித்து நிற்கிறது. ஏனெனில் அதன் நுழைவாயிலில் நிலை அளவு சிறியதாக உள்ளதால் அர்த்தமண்டபம் முன்னர் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. விமானம் முழுவதும் விழுந்து விட்ட நிலையில் பிரஸ்தரம் பகுதியிலுள்ள உத்திரங்கள் மட்டும் விழாமல் உள்ளது. அனைத்து காரைகளும் ஜீரணித்து நிலையில் வெறும் கற்களை அடுக்கி வைத்தது போல காட்சியளிக்கிறது. ஆலய அமைப்பு மற்றும் அதனை சுற்றிலும் தற்போது வெற்றிடமாக உள்ளது. இதனை கானும்பொழுது கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு பின் உள்ளதாக தெரிகிறது. ஒரு ஆலயம் கட்ட ஊரில் குடியேறிய மூன்று தலைமுறை எனும் பொருள் ஈட்டி இருக்க வேண்டும். அதை நோக்குங்கால் அப்பிரதேசத்தில் கி.பி ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே சமண குடும்பங்கள் இருந்திருக்க வேண்டும் ஆனால் தற்போது ஒரு சமணர் கூட இல்லை. அந்த ஆலயத்தின் மூலவரான ஸ்ரீ பார்ஸ்வநாதரின் சிலையை அவ்வூர் மக்கள் பாதுகாப்பு அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு அருகில் பின்னம் ஏற்படாமலிருக்க சாய்ந்த நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலையில் உள்ள அப்பெருமான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில், இருபுறமும் தாமரையை தூக்கிய நிலையில் உள்ள தேவர்களுடன் காட்சியளிக்கிறார். சிலை மிகவும் அரிது போன நிலையில் உள்ளது.
காலம்
7 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காவனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரக்கோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை