வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
வேளுக்குடி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610102.
இறைவன்:
அபிமுக்தீஸ்வரர்
இறைவி:
அபயாம்பிகா
அறிமுகம்:
திருவாரூர்- மன்னார்குடி சாலையில் 15 கிமீ தூரத்தில் உள்ளது வேளுக்குடி. பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே இருக்கிறது இந்த கோயில்,சாலையை ஒட்டி பெருமாள் கோயிலுக்கான அலங்கார வளைவு ஒன்று உள்ளது. மேற்கு நோக்கிய இந்த கோயிலின் எதிரில் நீளவாக்கில் ஒரு குளமும் உள்ளது. முகப்பில் ரிஷபாரூடராக சுதை உருவாக்கப்பட்டு உள்ளது.
இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அவரது வாயிலில் இரு கருங்கல்லால் ஆன துவாரபாலகர்கள் உள்ளன. இரு புறங்களிலும் நாகர்களும் வைக்கப்பட்டு உளளன. முகப்பு மண்டபம் ஒன்றும் உள்ளது அதில் தெற்கு நோக்கிய அம்பிகையின் கருவறை இணைகிறது. இறைவன் எதிரில் அழகிய நந்தியும் பலிபீடமும் உள்ளன.
இறைவன்- அபிமுக்தீஸ்வரர் இறைவி – அபயாம்பிகா
கோயிலின் தென்மேற்கில் ஒரு மண்டபத்தில் விநாயகரும் அவரின் முன்னம் சிறிய மூஞ்செலி வாகனமும் உள்ளன. அருகில் நால்வருக்கும் சிலைகள் உள்ளன. வடபகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதி உடன் ஆஞ்சநேயரும் உள்ளார். இவை இக்கோயிலுக்கு உரியதா என தெரியவில்லை. வடமேற்கில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளனர். அடுத்து ருணவிமோச்சனர் உள்ளார் இவரின் முன்னர் ஒரு சிறிய நந்தி உள்ளது. இவரை வழிபட்டு உடலியல் நோய்களை தீர்த்துக்கொள்ளலாம்.
கருவறை கோட்டங்களில் லிங்கோத்பவர், தென்முகன் துர்க்கை, உள்ளனர். வடகிழக்கு பகுதியில் காலபைரவர், மகாபைரவர் வீரபத்திரர் என மூன்று மூர்த்திகள் உள்ளனர். சில பிரதிஷ்டை செய்யப்படாத சண்டேசர் சிலைகளும் இன்னொரு அடையாளம் தெரியாத சிலையும் மதிலோரம் உள்ளது. கருவறை சுவற்றிலேயே பதிக்கப்பட்ட விநாயகர் தென்புறம் உள்ளார். அதுமட்டுமல்லாமல் கருங்கல் திருவாசியுடன் கூடிய ஒரு அடியார் சிலை உள்ளது அதுயாரென தெரியவில்லை. பழமையான பெருங்கோயில் ஒன்றின் மீளுருவாக்கம் இந்த கோயில் என்றால் அதுமிகையல்ல.
புராண முக்கியத்துவம் :
வசிஷ்ட்ட முனிவர் ஸ்ரீ ராமருக்கு திருமண நாள் குறித்து கொடுத்தவர் ஆனால் தான், நாள் குறித்து கொடுத்த இந்த தம்பதியர் வாழ்க்கை இவ்வாறு நிலைகுலைந்துவிட்டதே என மிகவும் வருத்தப்பட்டு பல தலங்களுக்கும் ஷேத்ராடனம் சென்று வர கிளம்பி பல தலங்களில் உள்ள இறைவன் சன்னதியில் தனது வருத்தங்களை பதிவு செய்துவந்தார். அவ்வாறு வந்தவர் இந்த ஊருக்கு வந்தபோது இங்குள்ள நெல்லிவன பகுதியில் தங்கி இங்குள்ள இறைவனை வேள்வி செய்து வழிபட்டு வந்தார். அதனால் ஊருக்கு வேள்விக்குடி என பெயர் பின்னாளில் வேளுக்குடி என மாறியது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேளுக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி