வெண்கரும்பூர் கைலாசநாதர் சிவன் கோயில்
முகவரி
வெண்கரும்பூர் கைலாசநாதர் சிவன் கோயில், வெண்கரும்பூர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 110.
இறைவன்
இறைவன் கைலாசநாதர் இறைவி -பெயர் அறிய இயலவில்லை
அறிமுகம்
கருவேப்பிலங்குறிச்சி- பெண்ணாடம் சாலையின் ஆறாவது கிமி-ல் உள்ளது இந்த சிறிய கிராமம். ஆலை கரும்பை வெண் கரும்பு என்பர் அதனால் தானோ என்னவோ வெண்கரும்பு விளையும் இவ்வூரை வெண்கரும்பூர் என அழைக்கின்றனர். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது இக்கோயில்??? சில இளைஞர்கள் மட்டைபந்து ஆடிகொண்டிருக்க அருகே சிதிலமடைந்த கருவறை. குறைந்தது முப்பது ஆண்டுகளாக வேர்விட்ட அரசமரமொன்று கருவறை மேல் தன் வேர்களை வழிந்தோட செய்துள்ளது. தெற்கு நோக்கி அம்பிகை கருவறை விமானம் இல்லாமல் உள்ளது . அதனுள் உள்ள பழைய துணிகளும், பிசுக்கடைந்த விளக்குகளும் யாரோ ஒரு புண்ணியவான் அவ்வப்போது கதவினை திறந்து மூடுகிறார் என புரியவைத்தது. இறைவன் கைலாசநாதர் இறைவி -பெயர் அறிய இயலவில்லை மதில்கள் காணாமல் போயிருக்க அதன் வாயில் மட்டும் கடைசி பெஞ்சு மாணவன் போல தூரத்தில் தன்னந்தனியனாய் நிற்கிறது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி