விளக்கப்பாடி சிவன்கோயில், கடலூர்
முகவரி :
விளக்கப்பாடி சிவன்கோயில்,
விளக்கப்பாடி, விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608702.
அருள் -63749 19449
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
விருத்தாச்சலம் – சிதம்பரம் செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவில் விளக்கப்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தென்புறம் உள்ள கிராமத்திற்கு இரண்டு கிமீ தூரம் செல்லவேண்டும். சிதிலமடைந்த சிவன்கோயிலின் எச்சங்களான சில சுடு செங்கற்கள் 800வருடம் பழமை கொண்டதாக உள்ளது. அக்கோயில் இருந்த இடத்தில இருந்து சிவலிங்கங்கள் இன்னும் பிற சிதைந்த நிலையில் உள்ள சில சில சிலைகளும் கிடைத்துதுள்ளன. எனினும் சிதைவடைந்த லிங்கத்துக்கு ஒரு சிறிய அளவில் ஆலயம் எழுப்ப எண்ணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
விளக்கப்பாடி எனும் கிராமம் 60 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்துள்ள விழல் ஏரியின் கரையில் உள்ளது இந்த விழல் ஏரியின் உட்புறத்தில் உள்ளது இந்த புதிய சிவாலயம். பழைய கட்டுமானங்களும் இந்த ஏரியின் உட்பகுதியிலேயே கிடைத்துள்ளன. பல வருடங்களாக ஏரிக்குள் இருந்த லிங்கத்தை சிறுவர்கள் விளையாட்டு பொருளாக கருதி கிழக்கு நோக்கி இருந்த லிங்கத்தை தென்கரையில் உள்ள ஊரை நோக்கி இருக்குமாறு வைத்துவிட்டனர். ஊர் மக்களும் தெற்கு நோக்கி வைக்கப்பட்ட லிங்கத்தையே வழிபட ஆரம்பித்துவிட்டனர். இன்றும் விளங்கேஸ்வரர் தரை மட்டத்தில் தெற்கு நோக்கியவாறு உள்ளார். காலசக்கரம் சுழல ஆரம்பிக்க விளையாடி மகிழ்ந்த சிறுவர்களை வைத்தே தனக்கான கோயிலை உருவாக்க நினைத்த எம்பெருமான் இளைஞர்களாக மாறி நிற்கும் சிறுவர்களைக்கொண்டே தனக்கான கோயில் பணிகளை செய்துகொண்டிருக்கின்றார்.
சிறிது சிறிதாக பொருள் சேர்த்து இதோ பிரம்மாண்டமாக முப்பது அடி உயர துவிதள விமானம் கொண்ட கருவறையுடன் எழும்பி நிற்கிறது. இக்கோயிலின் தலவிருட்சம் வன்னி எனப்படுகிறது. கோயில் கருவறையை ஒட்டி பெரிய வன்னி விருக்ஷம் வளர்ந்து நிற்கிறது. சிறிய கிராமமாக இருந்தாலும் சிவன்மேல் கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணமாக கோயில் மேலேழுந்துகொண்டிருக்கிறது. எனினும் சிறிய விவசாய கிராமமாக இருப்பதால் பெரிய அளவில் தொகை செலவிட்டு பணிகளை முடிக்க இயலாமல் உள்ளதை காணமுடிகிறது. இறைவனுக்கான கருவறை கட்டுமானம் விமானம் வரை முடிந்துவிட்டாலும் இன்னும் அம்பிகைக்கான கருவறையும் கோஷ்ட சிலைகளும் செய்யவேண்டி உள்ளது, கூடுதல் தகவல்களுக்கு விளக்கப்பாடி அருள் -63749 19449
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளக்கப்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி