Thursday Jan 09, 2025

விக்கிரசோழமங்கலம் மருதோதைய ஈஸ்வரமுடையார் திருக்கோயில், மதுரை

முகவரி :

விக்கிரசோழமங்கலம் மருதோதைய ஈஸ்வரமுடையார் திருக்கோயில்,

விக்கிரசோழமங்கலம்,

மதுரை மாவட்டம் – 625607.

இறைவன்:

மருதோதைய ஈஸ்வரமுடையார்

இறைவி:

சிவனேசவள்ளி அம்பாள்

அறிமுகம்:

 மதுரை மாவட்டத்தில் சோழவந்தான்க்கு மேற்கே 1கி.மீ தொலைவில் விக்கிரசோழமங்கலம் எனும் ஊரில் அருள்மிகு மருதோதைய ஈஸ்வரமுடையார் உடனுறை சிவனேசவள்ளி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் பஸ்ஸ்டான்டில் இருந்து பஸ்வசதி சோழவந்தான் வரை இருக்கு. அங்கிருந்து ஆட்டோ மூலமாக இக்கோவிலுக்கு வரலாம். வைகை ஆற்றின் தென்கரையில் இக்கோவில் அமைந்திருக்கும் அக்காலத்தில் பெருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட இவ்வழித்தடம் எங்கிலுமே பாண்டிய மன்னர்கள் சைவம் மற்றும் வைணவத்தை வளர்த்துள்ளனர்.  மதுரை மாநகரின் வெளியே கிராமப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் இப்படியொரு கோவில் உள்ளது எனும் தகவலே பலர் அறிந்திருக்கவில்லை. 

புராண முக்கியத்துவம் :

கிழக்கு பார்த்து அமையப்பட்ட அழகான கற்கோவில், கோவிலின் முன்புறமாக மிகப்பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து அமையப்பட்ட கோவிலில் சிறிய நான்கு கல் மண்டபத்தில் பிரதோஷ நந்தியம்பெருமான் சுவாமியைப்பார்த்து உள்ளார். நுழைவாயிலைக்கடந்து உள்ளே சென்றால் மகாமண்டபத்தில் அழகழகாய்த் தூண்கள் உள்ளது. சுவாமியின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கம் முருகனும் உள்ளனர். சதுர வடிவ ஆவுடையில் வட்டவடிவ சிவலிங்கம் இங்க மிக சிறப்பான ஒன்று.

இக்கோவிலின் தெற்கே சிவனேசவள்ளித் தாயாருக்கு தனி சன்னதி அமைத்துள்ளனர். 14 ஆம் நூற்றாண்டு அந்நிய படையெடுப்பில் இக்கோவில் சிதைக்கப்பட்டு தற்போது அஸ்திவாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், மகாமண்டபத்திலேயே தெற்கு பார்த்து நின்ற கோலத்தில் அம்பாளின் விக்ரகம் உள்ளது. கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, தட்சிணா மூர்த்தி இருந்தாங்க. கன்னிமூலையில் விநாயகரும், வடமேற்கில் சக்திவடிவேல் உருவத்தில் முருகப்பெருமானும் உள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்:

இங்கிருக்கும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய்யில் மருத்துவ குணங்கள் இருப்பதாகவும், மாரடைப்பு உள்ளிட்ட வியாதிகளுக்கு மருந்தாகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது, ஞானத்தை வழங்கும் புதன் ஆதிக்கம் மிகுந்த கோவிலாக விளங்கிறது, இக்கோவிலை வணங்கிய பின்பு இவ்வூரின் அருகேயுள்ள குருவித்துறை குருபகவானை வழங்கும்போது முழுப்பலன்களையும் பக்தர்கள் பெருகின்றனர். 

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விக்கிரசோழமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top