வண்டுவாஞ்சேரி பரங்கிரிநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
வண்டுவாஞ்சேரி பரங்கிரிநாதர் சிவன்கோயில்,
வண்டுவாஞ்சேரி, கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612602.
இறைவன்:
பரங்கிரிநாதர்
இறைவி:
ஆவுடையம்மை
அறிமுகம்:
கும்பகோணம்- குடவாசல் சாலையில் நாச்சியார்கோயிலை தாண்டி அடுத்த 2 கிமீ தூரத்தில் உள்ளது இந்த வண்டுவான்சேரி. சாலையோரத்திலேயே இடதுபுறம் ஒரு திடல் போன்ற பரப்பில் ஐயனார் மாரி என கோயில்கள் உள்ளன. அதன் இடையே ஒரு தகர கொட்டகையாக உள்ளது இந்த சிவன்கோயில். இறைவன் பரங்கிரிநாதர் இறைவி ஆவுடையம்மை கிழக்கு நோக்கியுள்ளார் இந்த சிவன் இவரின் பழம்பெருமை தெரியவில்லை. கொட்டகையின் மையத்தில் ஒரு மேடையில் சிவலிங்கமும் இருபுறமும் விநாயகரும் முருகனும் உள்ளனர். எதிரில் நந்தி பலிபீடம் பின்புறம் ஒரு பக்கமாக அம்பிகை சிறிய அளவில் உள்ளார். அடியார் எவரோ நித்திய பூஜை செய்து செல்கிறார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வண்டுவாஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி