வடபாதி சிவன் கோயில், திருவாரூர்

முகவரி :
வடபாதி சிவன் கோயில்,
வடபாதி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாருரின் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரி – நாகூர் நெடுஞ்சாலையில் ஆறாவது கிமீ-ல் உள்ள வைப்பூர் வந்து அதன் வடக்கில் ½ கிமீ சென்றால் வடபாதி அடையலாம். இவ்வூரில் சிறிய சிவன் கோயில் ஒன்று கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இதில் இறைவன் கிழக்கு நோக்கிய நிலையிலும் இறைவி தெற்கு நோக்கிய நிலையிலும் உள்ளனர். வாயிலில் விநாயகர் முருகன் மாடங்களும் உள்ளன. திருப்பணிகள் துவக்கப்பட்டு, பாதி வேலைகள் முடிவடைந்த நிலையில் அப்படியே பல ஆண்டுகாலமாக நின்றுபோயுள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.


காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடபாதி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
