வடகரை கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
வடகரை கைலாசநாதர் சிவன்கோயில்,
வடகரை, கீவளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611002.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
செளந்தரநாயகி
அறிமுகம்:
வெட்டாற்றின் தெற்கு கரை பகுதியில் இவ்வூர் உள்ளது. காரைக்காலில் இருந்து மேலவாஞ்சூர் வழியாக நாகூர் புறவழிப்பாதை வழி வெட்டாறு பாலம் தாண்டி, மேற்கில் பிரியும், கீழ்வேளுர் செல்லும் பாதையில் பெருங்கடம்பனூர், சென்று, அங்கிருந்து மேற்கில் உள்ள சாலையில் 3 கி.மீ சென்றால், வடகரை வரும். வடகரை சிறிய ஊராட்சி, கோகூர் செல்லும் பேருந்து ஊருக்குள் வராமல் இவ்வூரின் தென்புறம் செல்லும் சாலையில் இறக்கி விட்டு செல்லும்.
இங்கு கிழக்குப் பார்த்து இருக்கும் பெருமாள் ஆலயம், ஆலயம் ஒட்டி வடக்கில் பெரியகுளம் உள்ளது. அக்கோயிலின் தென்புறம் சிறியதாக ஒரு சிவன் கோயில் உள்ளது. சிவன் மற்றும் பெருமாள் ஆலயங்கள் சேர்ந்தே அமைந்துள்ளது. பெருமாளின் பெயர் ஸ்ரீசீனிவாசப்பெருமாள்.
இறைவன் கைலாசநாதர் – இறைவி செளந்தரநாயகி. மிக சிறிய ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி, கைலாசநாதர் உயரமான பாணத்துடன் அழகாக காட்சி தருகிறார். அம்பிகை சௌந்தரநாயகி தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார். தகர முன்மண்டபத்தில், பலி பீடம். நந்தியம்பெருமான் உள்ளார். இறைவன் கருவறை வாயிலில் பழமையான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் ஆகியோர் இருக்கின்றார்கள்.அம்மன் சன்னதி முன், சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர் வைத்துள்ளனர்.
கருவறை சுற்று சுவரில் தென்புறம் தக்ஷணமூர்த்தி , வடக்கு புறத்தில் துர்க்கையும் உள்ளனர். இக்கோயிலின் முன்னர் ஒருசிறிய ஆலமரம் அதனடியில் உடைந்து போன ஒரு விஷ்ணு சிலை கையில் சக்கரம் இருப்பது தெரிகிறது. பல நூறு வருடங்களின் முன்பு பெரிய கோயிலாகவும் சிறப்பான வழிபாடுகளும் கொண்டிருந்திருப்பார். இன்றோ அப்பகுதி வழியே செல்லும் சில விவசாயிகள் தவிர வேறு துணையில்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி