வடகரைமாத்தூர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
வடகரைமாத்தூர் சிவன்கோயில்,
வடகரைமாத்தூர், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609808.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கொல்லுமாங்குடி – காரைக்கால் சாலையில் எட்டாவது கிமீ-ல் உள்ளது மாத்தூர், இதனை ஒட்டி நாட்டாறு ஓடுகிறது. இதன் தென் கரையில் உள்ள கிராமம் தென்கரை மாத்தூர் எனவும் வடகரையில் உள்ள கிராமம் வடகரை மாத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது. வடகரை மாத்தூர் பிரதான சாலையில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ளடங்கி உள்ளது. ஊரின் மத்தியில் உள்ளது பெருமாள் கோயில், ஈசான்யமூலையில் உள்ளது இந்த சிவன்கோயில். எங்குள்ளது கோயில் என எவருமறியா நிலையில் பெரியதொரு திடல் பரப்பில் ஓரமாக உள்ளது சிவனது இருப்பிடம்.
பழம்பெரும் கோயில் காணமல் போய் கட்டிவைத்த கீற்று கொட்டகையும் நைந்து போய் காற்றில் பறந்துவிட வானம் பார்த்த கட்டிடமாக உள்ளது. சுவர்களில் மறைந்திருக்கும் செங்கல்கள் பல்லை காட்டி சிரிக்கின்றன. இறைவன் காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட உருண்டை வடிவ பாணமாக ஆவுடைமேல் காட்சியளிக்கிறார். இறைவனுக்கும் நந்திக்கும் இடையில் செடிகள் வளர்ந்து அவரது பார்வையை மறைக்கின்றது, அம்பிகை தெற்கு நோக்கி ஒரு சிறிய மேடையில் உள்ளார். கருவறை உட்புறம் விநாயகரும், பால தண்டாயுதபாணியும் உள்ளனர். நைந்துபோன துணியுடுத்தி நிற்கும் விநாயகரும் உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகரைமாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி