வடகண்டம் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
வடகண்டம் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், வடகண்டம், திருக்கண்ணமங்கை அஞ்சல், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104
இறைவன்
இறைவன்: தர்மபுரீஸ்வரர் இறைவி: சுவர்ணாம்பாள்
அறிமுகம்
வட கண்டம் தர்மபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கிமீ வட கண்டம் உள்ளது. கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்றழைக்கப்படுகிறது. தளிச்சாத்தங்குடி தற்போது மக்கள் வழக்கில் வட கண்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் தர்மபுரீஸ்வரர் ஆவார். இறைவி சுவர்ணாம்பாள் ஆவார். திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. சுற்றிலும் மதிற்சுவருடன் கிழக்கில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில் சிவன் பார்வதி சுதைச் சிற்பம் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஒரு பிராகாரத்துடன் ஆலயம் அமைந்திருக்கிறது. நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஆலயத்திற்கு தெற்குப் பக்கத்திலும் ஒரு வாயில் உள்ளது. பிராகாரம் சுற்றி வரும் போது மேற்குச் சுற்றில் விநாயகர் சந்நிதியும் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளன. பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து உள் வாயில் வழியே புகுந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி சுவர்ணாம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கரவீரம் கோவில் இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது. அவ்வாலயத்தின் குருக்கள் தான் தளிச்சாத்தங்குடி கோவிலையும் ணேர்த்து கவனித்துக் கோள்கிறார். ஆகையால் முன்கூட்டியே திருக்கரவீரம் குருக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வைப்புத்தலக் கோவிலை தரிசிக்கலாம். தளிசாத்தங்குடி ஆலயத்தின் மெய்க்காப்பாளர் வீடு ஆலயத்திற்கு அருகில் உள்ளது. அவர் வீட்டை விசாரித்து அவர் மூலமும் கோவிலை திறந்து காட்டச் சொல்லலாம்
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகண்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி