லக்குண்டி கோட் வீரபத்ரேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி :
லக்குண்டி கோட் வீரபத்ரேஸ்வரர் கோயில், கர்நாடகா
லக்குண்டி, கடக் நகர்,
கடக் மாவட்டம்,
கர்நாடகா – 582115
இறைவன்:
கோட்டே வீரபத்ரேஸ்வரர்
அறிமுகம்:
கோட்டே வீரபத்ரேஸ்வரர் கோயில், கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகே லக்குண்டி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவர் கோட்டே வீரபத்ரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு சிறிய கோவில் மற்றும் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கோயில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. இந்த கோவில் கி.பி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. லக்குண்டியில் கட்டப்பட்ட 101 கோயில்களின் எஞ்சியிருக்கும் நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். கோவில் முழுவதும் சேதமடைந்து விட்டதாக தெரிகிறது. லக்குண்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
காலம்
கி.பி 11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லக்குண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடக்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹுப்லி