மேல்கதிர்பூர் ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
மேல்கதிர்பூர் ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), மேல்கதிர்பூர், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 631502.
இறைவன்
இறைவன் : ஸ்ரீ கருதடி ஈஸ்வரர்
அறிமுகம்
சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம் மேல்கதிர்பூர் கிராமத்தில் காணப்படுகிறது. இக்கிராமம் காஞ்சியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் யானைகள் இங்கு வந்து பயிர்களை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் தடி கொண்டு யானைகளை விரட்டியதாக வரலாறு. அதனால் காரணப்பெயர் பூண்டு கருதடி ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிறிய ஆலயம் மகாமண்டபத்தில் விநாயகரும் பால சுப்ரமண்யரும் கோயில் கொண்டுள்ளனர். சண்டிகேஸ்வரர் கோமுகம் அருகே சன்னதி கொண்டுள்ளார். வெளியில் மண்டபத்தில் அழகான நந்தி தேவர். இங்கு அனைத்து விழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானவை சிவராத்திரி 4 காலம், அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை. தினம் பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு துரை-9566939544, திரு ஸ்ரீநிவாசன்- 8056484373, ரமேஷ்-9245868764.
நம்பிக்கைகள்
பரிகார தலம் வெகு காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு, இங்கு வந்து வழிபட்டு வந்தால் விரைவில் புத்திர பாக்கியம் ஏற்படும். அதோடு திருமண தடைகள் நீக்கும் பரிகார தலமாகவும் விளங்குகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல்கதிர்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை