Sunday Nov 17, 2024

மேட்டு மகாதானபுரம் ஸ்ரீ சோழேஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி

மேட்டு மகாதானபுரம் ஸ்ரீ சோழேஸ்வரர் திருக்கோயில், மேட்டு மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம் – 639102.

இறைவன்

இறைவன்: ஆறாஅமுதீஸ்வரர் இறைவி: மரகதவல்லி

அறிமுகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் ஊரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயில், 1000 வருடங்கள் பழைமையானது. அந்தக் கோயில் முதலாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே உள்ள மருதூர் காவிரி தென்கரையில் பழைமையான அந்தக் கோயில் அமைந்துள்ளது. இதை புனரமைக்காமல் இந்து சமய அறநிலையத்துறை கைவிட்டுவிட்டதால், 90 சதவிகிதம் சிதிலமடைந்த நிலையில் தற்போது கோயில் உள்ளது. இங்குள்ள பழைமையான சிற்பங்களைப் பாதுகாக்கவும், கோயிலைப் புதுப்பிக்கவும், நகரப் புனரமைப்பு நிதியின் கீழ் நிதிஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

சோழ மன்னன் முதலாம் ராஜராஜனால் (கி.பி. 985-1014) இந்தக் கோயில் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் ஆய்வுக்குப் பின், ஆயிரம் ஆண்டு கடந்த மேட்டுமருதூர் சிவன் கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம், கருங்களால் ஆன ஜகதி, பட்டி, குமுதவரி, கால் பிரஸ்தரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. விமானம் மட்டும் செங்கற்களால் அமைந்துள்ளது. கருவறையின் மூன்று பக்கமும் 22 தூண்களும், பிரஸ்தரத்தில் பூதகணங்கள் வரிசையாக அணிவகுப்பது போலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் மேலும் மனிதமுகம் குடைந்து, அழகுபடுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கட்டுமானம், சுதை உருவம் சிதைந்துவிட்டதால், அவற்றின் விவரம் முழுமையாகத் தெரிந்துகொள்ளமுடியாத நிலையில் உள்ளது. கருவறை வெளிப்பக்கத்தில் கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. கருவறைக்குள் பெரிய அளவில் ஆவுடையாரும், லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 10 தூண் கொண்ட அர்த்தமண்டபத்திலும், பல்வேறு சிற்ப வேலைப்பாடு உள்ளன. கோயில் முன் நந்தி, சேஷ்டாத்தேவி, விநாயகர் சிற்பம் காணப்படுகின்றது.

சிறப்பு அம்சங்கள்

நுழைவாயிலில் தென்புற நிலைக்காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. அரசனின் 11வது ஆட்சிக்காலம் மூலம் இவ்வூர், கோயில் இறைவன், மன்னனைக் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில், `சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி’ என முதலாம் ராஜராஜனைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கி.பி.996ல் கோயில் கட்டப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேட்டு மகாதானபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top