முட்டம் மகாபலீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
முட்டம் மகாபலீஸ்வரர் சிவன்கோயில்,
முட்டம், மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609001.
இறைவன்:
மகாபலீஸ்வரர்
இறைவி:
பெரியநாயகி
அறிமுகம்:
ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி சிவ வழிபாடு செய்து வந்தார். அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறையை அடுத்த முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத மகாபலீஸ்வரர் ஆலயத்தில், மகாபலி சக்கரவர்த்தி வழிபாடு செய்து, இழந்த ஐஸ்வர்யங்களை மீட்டதாக புராண வரலாறு. மயிலாடுதுறையின் தெற்கில் செல்லும் திருவாரூர் சாலையில் இரண்டு கிமி தொலைவில் மஞ்சளாறு ஓடுகிறது அதன் தென் கரையில் 2 கிமீ பயணித்தால் முட்டம், ஆற்றை ஒட்டியே கிராமம் உள்ளது. இவ்வழி செல்வது சற்று சிரமம் தான். நல்ல தார் சாலை வழி என்றால் எலந்தங்குடி வந்து அதன் வடகிழக்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது முட்டம்.
சிவப்பெயர்ச்சிக்கான விஷேச தலம் தான் இந்த முட்டத்து மகாபலீஸ்வரர் திருக்கோயில். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், சிதிலமடைந்து போக, தற்போது ஒரு கீற்றுக் கொட்டகையில் இறைவன் இருக்க வழிபாடு நடைபெற்று வருகிறது.
இறைவன் – மகாபலீஸ்வரர் இறைவி – பெரியநாயகி
கிராமத்தின் தென்புறம் தனித்து ஒரு குளத்தின் கரையில் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் பெரிய அழகிய பாணமும் ஆவுடையார் கொண்டு விளங்குகிறார். அருகில் அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இதல்லாமல் ஊருக்குள் ஒரு குளத்தின் கரையில் ஒரு சோடச லிங்கமும் உள்ளது. அவரின் முன்னம் ஒரு நந்தியும் விநாயகரும் உள்ளார்கள். இக்கோயில் இறைவனை பூஜிக்க யாருமே வருவதில்லை.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி