Saturday Dec 28, 2024

முக்வா சுப்பிரமணியர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி :

முக்வா சுப்பிரமணியர் திருக்கோயில்,

முக்வா, ஹொன்னாவரா தாலுகா,

கர்நாடகா மாவட்டம் – 581334.

இறைவன்:

சுப்பிரமணியர்

அறிமுகம்:

 நாகதோஷ பரிகார தலங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தக்ஷிண கர்நாடகாவில் முக்வா என்ற கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம். பசுமையான சூழலுக்கு நடுவில் கேரள பாணி கட்டடக்கலையை பின்பற்றி கோயில் கட்டப்பட்டுள்ளது. துளு நாட்டு பகுதி முழுவதும் இத்தகைய கட்டடக்கலையில் காணலாம். கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற சுப்ரமணியர் கோயிலில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலின் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஹொன்னாவரா தாலுகாவில் முக்வா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுப்பிரமணியர் கோயில் பெங்களூருவில் இருந்து 475 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற கோகர்ணாவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

       ஒருமுறை பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மன். அதற்காக அவனை சிறையில் அடைத்தார் சுப்பிரமணியன். இதைக் கண்ட ஈசன் மகனை கண்டித்தார். என்னதான் தவறு என்றாலும் பெரியவர்களை அவமரியாதை செய்ததை உணர்ந்து முருகன் தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொண்டார். நாகமாக உருமாறி விட்டார். அதனால் பார்வதி பதறினார். தேவி கேட்டுக் கொண்டதன் பேரில் மீண்டும் தனது சுய உருவத்தை அடைந்தான். இந்நிலையில் நாகர்களின் தலைவியான வாசுகி கருடனுக்கு பயந்த சுப்பிரமணியரை தஞ்சமடைந்தது. உடனே கருடனிடமிருந்து நாகர்களை காப்பாற்றினார். அதனால் நாகங்கள் தங்கள் கடவுளாக சுப்பிரமணியரை வணங்குகின்றனர்.

ஒருமுறை நாரதமுனிவர் பூலோகத்திற்கு விஜயம் செய்தார். அப்போது தவம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடத்தை தேடினார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் மனம் தெய்வீக அதிர்வுகளை உணர அங்கு அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அசரீரியாக தான் லோக க்ஷேமத்திற்காக இவ்விடத்தில் எழுந்தருள இருப்பதாகவும் தன்னை தானே இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புமாறும் குரல் கேட்டது. கண்களைத் திறந்த நாரதர். தனக்கு முன்பாக சுப்பிரமணியர் பாலகனாக அர்ச்சாவதார மூர்த்தியாக அழகாக காட்சி தருவதை கண்டார். திருமேனி பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்து வழிபட்டார். அவரே இத்தலத்தில் அருளும் முருகப் பெருமான்.

நம்பிக்கைகள்:

பொதுவாக திருமணத்தடை குழந்தையின்மை சரும நோய்கள் வயிற்று நோய்கள் தீராத பிரச்சினைகள் போன்றவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் நாகதோஷம் முக்கிய காரணமாக என்பது சுப்பிரமணி அவரை வழிபட்டால் இந்த தோஷத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை

சிறப்பு அம்சங்கள்:

       சதுரவடிவ கோயிலின் முகமண்டபத்தின் துவஜஸ்தம்பம் பலிபீடம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் எதிரில் தீர்த்த மண்டபம் உயரமாக காணப்படுகிறது. அதில் முருகனின் மயில் வாகனம் தரிசனம் உள்ளது. மூன்று படிகளுடன் நேரமாக கருவறை அமைந்துள்ளது. அதற்கும் பிரகாரத்திற்கும் இடையே உள்ள முற்றம் மேற்கூரை இல்லாமல் இருக்கிறது. பிரகாரத்தில் மகாகணபதி காட்சியளிக்கிறார். கருவறையில் வெள்ளி கவசத்துடன் மூலவர் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி உள்ளார்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் பக்தர்கள் நாகர் சிலைகளை கோயில் வளாகத்தில் இருக்கும் நாகவனம் என்ற பகுதியில் பிரதிஷ்டை செய்கிறார்கள். பரந்து விரிந்து காணும் இடமெல்லாம் நாகர் சிலைகளை தரிசிப்பது இங்கு காணப்படும் சிறப்பம்சம்.

திருவிழாக்கள்:

தினசரி பூஜைகளூடன் ஆஸ்லேஷ பலிபூஜை, நெய் தீபம், நாகர் சிலை பிரதிஷ்டை, துலாபார சேவை, பால் நிவேதனம் போன்ற சேவைகள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. தினமும் 50 முதல் 60 வாழைத்தார்கள் வரை பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். விசேஷ நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வந்து விடுகின்றன. பக்தர்களுக்கு வாழைப்பழம் பிரசாதமாக தரப்படுகிறது. சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முக்வா

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹொன்னாவரா

அருகிலுள்ள விமான நிலையம்

ஹூப்ளி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top