முக்திமண்டபம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
முக்திமண்டபம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நிலா தெற்கு மடவிளாகம். மேலக்கோட்டைவாசல், நாகப்பட்டினம் மாவட்டம் – 611003.
இறைவன்
இறைவன்: காசிவிஸ்வநாதர்
அறிமுகம்
காசிக்கு அடுத்தபடியாக முக்தி மண்டபம் அமைந்துள்ள திருத்தலம் நாகை மட்டுமே. தலம் மூர்த்தி தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்ற நாகையில் மிக முக்கிய தீர்த்தம் சிவகங்கை எனும் தேவதீர்த்தம் ஆகும் நீலாயதாட்சி கோயிலின் தெற்கு மடவிளாக தெருவில் அமைந்துள்ளது இந்த காசி விஸ்வநாதர் கோயில். இக்கோயிலை ஒட்டியே அமைந்துள்ளது இந்த தீர்த்தம் அழகான மண்டபம் கொண்டு தீர்த்தக்கரை அலங்கரிக்கப்பட்டுள்ளது ஆனால் இன்றைய நிலை செடிகொடிகள் முளைத்து தூர்ந்து போய் கிடக்கிறது, இடமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் மிக குறைந்த நேரமே திறக்கப்படுகிறது. வெளியூர் மக்கள் பலருக்கு இங்கு ஒரு கோயில் இருப்பதே தெரியாது எனலாம்.
புராண முக்கியத்துவம்
வழக்கமாக கோயில் அருகில் யாராவது இறந்துவிட்டால் கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த தலத்தில் சிவனுக்கு அணிவித்த மாலையை அந்த உடலுக்கு சார்த்தி முக்தி கொடுப்பது வழக்கம். திருநாகை காரோணத்தின் தலபுராணத்தினை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இந்த மண்டபத்தில் தான் அமர்ந்து அரங்கேற்றியதாக கூறுகின்றனர். வள்ளலாரும் இந்த மண்டபத்தில் தங்கியிருந்தார் என்பதும் கூடுதல் செய்தி பிற திருக்கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும்போது இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம் ஆனால் தற்போது தூர்ந்து போய் உள்ளே செல்ல கூட வழியில்லை. அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் கிழக்கு நோக்கியது, அம்பிகை தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். பிரகாரத்திலோ, கோஷ்டத்திலோ மூர்த்தங்கள் ஏதும் இல்லை. சண்டேசர் சன்னதி கூட இல்லை என்பதும் வருத்தம் தரக்கூடியது. பிரகாரங்கள் காடு போல காட்சியளிக்கிறது. #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி