மிராளூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்
முகவரி
மிராளூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மிராளூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 601.
இறைவன்
இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி ஞானாம்பிகை
அறிமுகம்
புவனகிரியில் இருந்து சேத்தியாதோப்பு சாலையில் உள்ளது மிராளூர் , பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளே இருக்கிறது ஊர். கோயிலை சுற்றி நூலகம், பள்ளிக்கட்டிடம், விவசாய அலுவலகம் என சுற்றி கட்டிவிட கோயிலுக்கு கிழக்கில் பாதை இல்லை, பின் வழியே தான் செல்ல வேண்டி உள்ளது, கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர்.இறைவன் எதிரில் அழகிய நந்தி ஒன்றுள்ளது கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். நவகிரகம் உள்ளது. பிரகாரத்தில் வேறு தெய்வங்கள் இல்லை பின் புறம் ஒரு பழுதான லிங்கமும் சிறிய அம்பிகையின் சிலையும் உள்ளது. பிற மதத்தினர் அழிப்பு ஆக்கிரமிப்பு இவற்றினை தாண்டி அதிகம் சிவன் கோயில் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்வது அரசு தான். ஏதாவது கட்டிடமா உடனே கேள்வி முறை இன்றி அங்கே கட்டிவிடுகின்றனர். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்பது போல் கேட்க ஆள் இல்லாமல் நான் பார்த்த பல சிற்றூர் சிவன் கோயில் நிலங்கள் அரசினால் சூறையாடப்பட்டு கொண்டிருப்பது அழிவின் அறிகுறி இந்து முன்னணியினர் இது பற்றி கேள்வி எழுப்புதல் வேண்டும், இதுவே ஒரு வக்பு வாரிய நிலத்தில் அலுவலகம் வரம்பின்றி கட்ட முடியுமா? பெரும்பான்மை மக்களை ஏமாளிகளாக்குவதே தமிழக கட்சிகளின் சாதனை. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மிராளூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி