மாளிகைகோட்டம் சிவன்கோயில், கடலூர்
முகவரி
மாளிகைகோட்டம் சிவன்கோயில் மாளிகைகோட்டம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606105.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கருவேப்பிலங்குறிச்சி – பெண்ணாடம் நெடுஞ்சாலை NH141 ல் பத்தாவது கிமி -ல் உள்ளது மாளிகைகோட்டம் கிராமம். தென்புறம் வெள்ளாற்றையும் அதனை ஒட்டிய காடுகளையும் அரணாக கொண்டு சோழமாளிகை இருந்தது. இந்த மாளிகை தற்போதைய ஆய்வு மாளிகைக்கு ஒப்பானதாக இருந்தது. இதனால் இப்பகுதி மாளிகை கோட்டம் எனப்படுகிறது. கோட்டைக்காடு, சுந்தரசோழபுரம் எனும் ஊர்கள் இன்றும் உள்ளன. இங்கு பெரிய சிவாலயம் அன்றிருந்தது. இன்று மீதமிருப்பது லிங்கமும் நந்தியும் மட்டுமே. பிரதான சாலையோரம் உள்ள எஸ்ஸார் எரிபொருள் நிரப்பு மையம் ஒட்டி செல்லும் சிறிய மண் சாலையில் உள்ளது இந்த சிவன்கோயில். உள்ளூர் மக்களிடம் சாராயக்கடை எங்குள்ளது என கேளுங்கள்… கோயிலுக்கும் சாராயக்கடைக்கும் இடையில் இருப்பது ஒரு வேலி மட்டுமே.
புராண முக்கியத்துவம்
பெரிய வளாகம் அதில் கிழக்கு நோக்கிய உயர்ந்த மேடை மேல் பெரிய சிவலிங்கம் மிக கம்பீரமாக, நான் இருக்கிறேன் உனக்காக என சொல்வது போல். அவரின் எதிரில் ஒரு நந்தியம்பெருமான் மூக்குபகுதி உடைந்த நிலையிலும் இறை சிந்தனையில் உள்ளார். தென்புறம் ஒரு வேம்பின் கீழ் சிறிய மாடம் போன்ற அமைப்பில் விநாயகர் பூ அலங்காரத்துடன் இருக்கிறார். பெண்மணி ஒருவர் இக்கோயிலை பராமரிக்கிறார். நந்தி பலிபீடம் இருக்கும் பகுதி தகர கூரையால் வேயப்பட்டுள்ளது ஆனால் இறைவன் மேல் கட்டப்பட்டுள்ள நாற்சதுர இரும்பு சட்டங்களின் மேல் ஒரு துணி மட்டுமே போடப்பட்டுள்ளது. மேலே தகரம் போடாமல் பணிகள் நின்றுபோயுள்ளது. அன்றைய மாளிகையில் கோட்டம் கொண்டவன் அவன், இன்று அவனுக்கு ஒரு தகர கொட்டக்கூட இல்லாமல் காட்சி தருகிறார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாளிகைகோட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திட்டக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி