மானம்பாடி சிவன் கோயில்
முகவரி
மானம்பாடி சிவன் கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்,
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் வட்டம், மானம்பாடி சிவன்கோயில் கும்பகோணம் – சென்னை சாலையில் பத்து கிமி தொலைவில் உள்ள சோழபுரம் என்னும் ஊரை அடுத்து மானம்பாடி என்றதோர் சிற்றூர் உள்ளது. அந்த ஊரின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது நாகநாதசுவாமி கோயில் என வழங்கப் பெறும் பண்டைய ஸ்ரீகைலாசம் என்னும் கைலாசநாதர் சிவாலயமும் இந்த நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது. . சோழப் பேரரசர்கள் காலத்தில் இவ்வூர் வடகரை இராஜேந்திர சிம்ம வளநாட்டு மிழலை நாட்டு வீரநாராயணபுரமான இலச்சிக்குடி என அழைக்கப்பெற்றதாகவும், முதலாம் குலோத்துங்க சோழன்காலம் முதல் வீரநாராயணபுரமான மாறம்பாடி எனக் குறிக்கப் பெற்றதாகவும் ஸ்ரீகைலாசத்துக் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. மாறம்பாடி காலப்போக்கில் மானம்பாடியாகி விட்டது. சாலை விரிவாக்கம் செய்யவேண்டியுள்ளதால் கோயிலை இடமாற்றம் செய்யவேண்டும் என நெடுஞ்சாலை துறை கூறியது கண்டு பல போராட்டங்களின் பின்னர அந்த செயல் கைவிடப்பட்டு சாலை வேறு பகுதியில் அமைக்கப்பட்டது. சிதைந்துள்ள இக்கோயிலை புனரமைக்க எண்ணி இ.ச.அ. துறை பணிகளை ஆரம்பித்தது. என்னகாரணமாகவோ பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகிவிட்டன. நம்முடைய வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றின், காப்பகங்களாகவும் திகழும் ஆலயங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது, நம் கோயில்களைப் பாதுகாப்பதன் மூலம் கலை, கலாசாரம், தொன்மைப் பண்பாடு போன்றவை காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யமுடியும். தட்டும் கைகள் அதிகமாகும்போதுதான் பல கதவுகள் திறக்கப்படுகின்றன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவிலச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி