மருவத்தூர் பேரகழி உடையார் அழகிய நாயனார் சிவன்கோவில், பெரம்பலூர்
முகவரி
மருவத்தூர் பேரகழி உடையார் அழகிய நாயனார் சிவன்கோவில், பேரகழி (பேரளி), மருவத்தூர், பெரம்பலூர் மாவட்டம் – 621 708.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
இக்கோவில், மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. கோவிலின் முன் மண்டபம் வடக்குச் சுவரில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில், கோவிலில் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்தது, கணபதி மற்றும் க்ஷேத்ர பாலர் தந்தருளியது, அறுபத்துமூவருக்கும் செப்பு திருமேனி வழங்கியது, நிலதானம் வழங்கியது, அதை அளந்த முறை, அளக்கப் பயன்படுத்திய அளவுகோள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மண்டபத்தின் சுவரிலும் நிலதானம், அமுதுபடி, நந்தா விளக்கு எரிக்க தானம் பற்றிய மூன்றாம் குலோத்துங்க சோழரின் மற்றுமொரு கல்வெட்டும் உள்ளது. கல்வெட்டுகளில், பேரகழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அறுபத்துமூவர்களின் திருமேனிகள் என்னவாகின என்பது எவரும் அறிந்திராத ஒன்றே ஆகும்.
புராண முக்கியத்துவம்
இக்கோவில் விமானம், கோபுரம், மதில் சுவர் என அனைத்தும் சிதிலமடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது. விமானம் முற்றிலும் இல்லாமல் போனாலும், அது இருந்ததிற்கு சான்றாக குரு பகவானின் சிலையானது மேலே உள்ளது. அச்சிலையும், எப்போது கீழே விழுவோம் என்ற மனநிலையில், தரைதளத்தை நோக்கி சரிந்துள்ளது. அதன் நேர் எதிரில், தரையில், சோழர் காலத்து கணேஷப் பிள்ளையார் உள்ளார். விமானத்தில், எட்டு திசையும் நோக்கியிருக்க வேண்டிய எட்டு நந்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக, எங்கெங்கோ பார்த்து, பாதி மேலும் பாதி தரையிலும் கிடக்கின்றன. மண்டை பிளக்கும் மதிய வெயிலிலும், கோவிலின் உள்பகுதி, அம்மாவாசை இருட்டும் அஞ்சும் கரும் இருட்டுடன் திகழ்ந்தது. ஆள் அரவமே இல்லாத அங்கு, கருவறையில் ஈசனை அடைவதற்கும் மனம் திக்கென்று இருந்தது. ஆங்காங்கே, ஆள் விழுங்கும் குழிகள் போன்று, நான்கு அல்லது ஐந்து அடி குழிகள் இருந்தது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருவத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி