மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
மருத்துவக்குடி, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612101.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
கும்பகோணத்தின் கிழக்கில் 15 கிமீ தூரத்தில் உள்ளது ஆடுதுறை இங்கிருந்து திருநீலக்குடி சாலையில் உள்ளது மருத்துவக்குடி. இது மேலமருத்துவக்குடி எனப்படுகிறது. பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பெற்ற ஊர் இதுவாகும். இவ்வூர் திரு இடைக்குளம் என அழைக்கப்பட்டது. இங்கு இரு சிவன் கோயில்கள் உள்ளன. சாலையின் கிழக்கில் உள்ளது காசி விஸ்வநாதர் கோயில் இந்த காசி விஸ்வநாதர் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில், பல காலம் பழுதடைந்த நிலையில் கிடந்த இக்கோயில், பல்வேறு கட்ட முயற்சிகளின் பின்னர் நவம்பர் 2022 ல் குடமுழுக்கு கண்டது. இதற்க்கு முன் 1938 –ல் குடமுழுக்கு கண்டுள்ளது.
கிழக்கு நோக்கிய இறைவன் என்றாலும் தெரு தென்புறத்தில் செல்வதால் பிரதான வாயில் தெற்கில் அமைந்துள்ளது. முகப்பில் பார்க்க சிறியதாக இருந்தாலும் கோயில் வளாகம் ஒரு ஏக்கர் அளவில் பெரியதாக உள்ளது. இறைவன்- காசி விஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி கிழக்கு நோக்கிய இறைவன் தெற்கு நோக்கிய அம்பிகையின் கருவறை இரண்டையும் இணைக்கும் வண்ணம் ஒரு கூம்பு வடிவ மண்டபம் நாயக்கர் கால பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் கிழக்கு பாகத்தில் நுழைவாயில் வெளியில் நந்தி மண்டபம் பலி பீடமும் அமைந்துள்ளது.
இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தி, அம்பிகையும் அழகான நடுத்தர அளவுடன் உள்ளார். மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் சூரியன் சனி ஆகியோர் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் துர்க்கை உள்ளனர். தனி சிற்றாலயங்கள் செல்வவிநாயகர் மற்று வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு உள்ளது சண்டேசர் வழக்கம் போல் கோமுகத்தருகே கோயில் கொண்டுள்ளார். கோயில் பழமை மாறாது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருத்துவக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி