Wednesday Jan 08, 2025

மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் திருக்கோயில், சென்னை

முகவரி :

மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் திருக்கோயில்,

மயிலாப்பூர்,

சென்னை மாவட்டம்,

தமிழ்நாடு – 600004.

தொலைபேசி: +91- 44 – 2498 1893, 2498 6583.

இறைவி:

முண்டககண்ணி அம்மன்

அறிமுகம்:

 முண்டககண்ணி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இது மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் விலங்கு பலிக்கு பிரபலமானது. மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் சுமார் 1800 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. முண்டககண்ணி அம்மன் குடும்பமாக இருந்த இயற்பெயர் மந்தாகினி அம்மன். முண்டககண்ணி அம்மன் கோயில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறம் மாதவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு ரூபமாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் மூலஸ்தானம் மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது. அம்பாள், எளிமையை உணர்த்துவதாக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள். இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், “முண்டககண்ணியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். முண்டகம் என்றால் “தாமரை’ என்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பான அமைப்பு.

நம்பிக்கைகள்:

அம்மை நோய் கண்டவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொள்ள நிவர்த்தியாவதாக நம்பிக்கை. திருமண தோஷம், கண்நோய் நீங்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற அம்பிகைக்கு 23 விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

 முண்டககண்ணியம்மன் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக்கிறது. இம்மரத்திற்குள் நாக புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் நாகதேவதைக்கு பால், பன்னீர்னீ, மஞ்சள் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மூலஸ்தானத்திற்கு இடப்புறத்தில் உற்சவ அம்பாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.

இவளுக்கு இருபுறமும் சிம்ம வாகனம் இருக்கிறது. பிரகாரத்தில் சப்த கன்னியர் லிங்கம் போன்ற அமைப்பில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு இருபுறமும் ஜமதக்னி மகரிஷி மற்றும் அவரது மகன் பரசுராமர் இருவரும் காவல் தெய்வமாக இருக்கின்றனர். கோயில் முகப்பில் அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலை சுற்றி கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் ஆகிய பிரசித்தி பெற்ற பிற தலங்கள் அமைந்திருக்கிறது. முண்டக கண்ணியம்மனை தரிசிக்கச் செல்பவர்கள் இத்தலங்களையும் தரிசித்து திரும்பலாம்.

1008 மலர் கூடை அபிஷேகம்: இக்கோயிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அம்பிகை சன்னதியின் முகப்பில் பிராம்மி, மகேஷ்வரி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரும் சிலை வடிவில் காட்சி தருகின்றனர். ஆடி, தை மாதம் முழுதும் இங்கு விழா எடுக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் விழாவும், தை மாதத்தில் பொங்கல் வைக்கும் வைபவமும் பிரசித்தி பெற்றது.

ஆடி கடைசி வெள்ளியில் 1008 மலர்க்கூடை அபிஷேகம், தை கடைசி வெள்ளியில் 108 விளக்கு பூஜை, சித்ரா பவுர்ணமியில் 1008 பால்குட அபிஷேகம் நடப்பது விசேஷம். நவராத்திரி ஒன்பதாம் நாளில் அம்பிகை, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதி வீ யுலா செல்கிறாள். இவளிடம் வேண்டுபவர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. தினமும் மாலையில் அம்பிகை தங்கத்தேரில் உலா செல்கிறாள். இதில் பங்கேற்க கட்டணம் ரூ. 1000.

திருவிழாக்கள்:

ஆடி, தை மாதம் முழுதும் திருவிழா, சித்ராபவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மயிலாப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாப்பூர், திருமயிலை மெட்ரோ

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top