Saturday Dec 28, 2024

மன்னாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், சோழவந்தான், மதுரை

முகவரி

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மன்னாடிமங்கலம், சோழவந்தான் வழி, மதுரை மாவட்டம்-625 207. போன்: +91- 4543 – 253 254, 253 757

இறைவன்

இறைவன்: நரசிங்கப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

நரசிங்கப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் நகருக்கு அருகிலுள்ள மண்ணடிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. வரலாற்றுக் காலத்தில் இந்த கிராமம் தோழி அம்மாள் புரம் என்று அழைக்கப்பட்டது. இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில் “கஜகேசரி’யாக உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சம்.

புராண முக்கியத்துவம்

சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவன் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றான். ஆனால், அவனது மகனாகப்பிறந்த பிரகலாதன், தந்தையை வணங்காமல் நாராயணனை வணங்கி வந்தான். கோபம்கொண்ட இரணியன், மகனை துன்புறுத்தி அவன் வணங்கும் நாராயணனை காட்டும் படி கூறினான். அது பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும் அந்திக்காலம். அப்போது, தூணிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட உருவில் தோன்றிய மகாவிஷ்ணு, இரணியனை அழித்தார். இவரே, இத்தலத்தின் மூலவராக இருந்து அருளுகிறார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல இல்வாழ்வுஅமைய,செவ்வாய்தோஷம் நீங்க வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

துவாரபாலகர்கள்: மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால் அவருக்கு சோளிங்கபுரத்திலும், கருடனின் விருப்பத்தால் அவருக்கு அகோபிலத்திலும் காட்சி தந்து அருளினார். எனவே இங்கு இவ்விருவரும் மகாமண்டபத்தில் துவாரபாலகர்களாக காட்சி தருகின்றர்.கொடிமரம், விமானம் இல்லை. செவ்வாய் தோஷம் நீக்கும் நரசிங்கர்: மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும், நவக்கிரகங்களை ஒத்துள்ளன. எனவே, நவக்கிரகங்களை வணங்கி பெறும் பலன்களை, விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கிபெறலாம். அவ்வகையில் இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை ஒத்துள்ளார். எனவே, இவரை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, தனுர்மாத பூஜை, திருக்கார்த்திகை தீபம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மன்னாடிமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top