மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி
மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் திருக்கோயில், சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்- 603306.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஏரி காத்த ராமர் இறைவி : சீதாதேவி
அறிமுகம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் மதுராந்தகத்தில் நடுநாயகமாக அமைந்துள்ளது. ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி , லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயருடன் கருவறையில் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தில் சீதாதேவி, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், உடையவர், பெரிய நம்பிகள் ஆகிய சன்னதிகள் உள்ளன. கொடிமரத்துடன் கூடிய இந்த தலத்தின் தல விருட்சம் மகிழ மரம். இதன் கீழ் அமர்ந்துதான் ஸ்ரீ பெரிய நம்பிகள் ஸ்ரீ ராமானுஜருக்கு ஆவணிமாதம் சுக்ல பஞ்சமியில் உபதேசம் செய்ததாக ஐதிகம். ராவணனை சம்ஹாரம் செய்தபின் புஷ்பக விமானத்தில் திரும்பும்போது ஸ்ரீ விபண்ட மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து தரிசனம் கொடுத்ததாக தல புராணம் கூறுகிறது. இதனை நினைப்பூட்டும் வகையில் பிரதி வருடம் காணும் பொங்கல் அன்று அருகில் உள்ள கருங்குழி எனும் ஊருக்கு எழுந்தருளி காட்சி கொடுக்கிறார் ஸ்ரீ ராமர். தொடர்புக்கு திரு கிருஷ்ண பட்டாச்சாரியார் (7708886360), திரு குமார் -76393 39369, திரு மகேஸ்வரன்-9629400610. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள இத்தலத்திற்கு சென்னை,, செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் உள்ளன.
நம்பிக்கைகள்
பரிகார தலம்: புத்திர பாக்கியம் பெறவும், கல்யாண தடைகள் நீங்கவும் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இத்தலம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை