மணல்மேல்குடி உஜ்ஜயினிமாகாளி அம்மன் கோவில், புதுக்கோட்டை

முகவரி :
மணல்மேல்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில்,
மணல்மேல்குடி, அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் – 614260.
இறைவி:
மாகாளி
அறிமுகம்:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் .சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தினமும் வீட்டுக்கு ஒருவராக மடிந்து கொண்டு இருந்தார்கள். போதிய வைத்திய வசதி இல்லாத அந்த காலத்தில் அந்த நோயை போக்கும் வழிவகை தெரியாமல் மக்கள் தடுமாறினார்.
ஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் வண்டிக்கார கருப்பன் என்பவர் மீது அம்மனின் அருள் வந்தது.அவர் சந்தைபேட்டை பகுதியில் வேப்பமரத்தின் அடியில் ஊன்றியிருந்த திரிசூலத்தை எடுத்துக்கொண்டு மக்கள் படைசூழ நகர்வலம் வந்தார். பின்னர் நான் தான் உஜ்ஜைனி மாகாளி வந்திருக்கின்றேன். உங்களை காப்பாற்ற வந்திருக்கிறேன் இனிமேல் இப்பகுதியில் காலரா நோய் இருக்காது. இது சத்தியம் இது சத்தியம் என்று கூறி நகரின் மையப்பகுதியில் சூலாயுதத்தை ஊன்றினார்.
அன்றிலிருந்து இன்று வரை இந்த பகுதியில் காலரா பரவல் இல்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள். எந்த நோய் வந்தாலும் இந்த அம்மனை மனதார நினைத்தாலே போதும் நோய் ஓடிவிடும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள காளி கோவில் வடிவில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வந்து அங்கிருந்து மணல்மேல்குடி ஆகிய இப்பகுதியில் இறங்கி நடந்தே ஆலயம் வரலாம்.
https://kathir.news/spirituality/news-1571613
காலம்
95 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணல்மேல்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி