மடவூர்பரா குடைவரை கோவில் , திருவனந்தபுரம்
முகவரி
மடவூர்பரா குடைவரை கோவில், போத்தன்கோடு, திருவனந்தபுரம் – 695587 கேரளா.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
திருவனந்தபுரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் போத்தன்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது ஓர் பழமை வாய்ந்த குடைவரை கோவில். பிற்கால கல்வெட்டுகளுடன் காணப்படும் இந்த குடைவரை ஏழாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஏழாம் நூற்றாண்டு வரை இது புத்தத்துறவிகள் தங்குமிடமாக இருந்ததாக ஒரு சாராரும், சமண துறவிகள் தங்குமிடமாக இருந்ததாக ஒரு சாராரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.அதற்கு பிறகு இது சிவன் கோவிலாக மாற்றப்பட்டதாக இந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கிறாங்க. அதுபோக இந்தமாதிரி ஒரு குடைவரை கோவில் இருக்கிறது என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை. பகல் நேரத்தில் பெரும்பாலும் பூட்டியே இருக்கும். கோவிலின் உள்ளே பார்க்கனும் என்றால் காலையில் ஆறிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாகவும் மாலை ஐந்து முதல் ஆறு நுற்பது வரை பூஜை நடக்கும். அப்பொழுது காணலாம்.
காலம்
7 – 9 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மடவூர்பரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்