மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்)
முகவரி
மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்), தக்கோலம் – 631 151
இறைவன்
இறைவன்: அழகிய கரிய வரதர், இறைவி: மங்கள லட்சுமி
அறிமுகம்
கோயில் நிலங்கள் கொள்ளையடிப்பதை பார்த்துள்ளோம், சிலைகள் திருடு போவதை கேட்டுள்ளோம். ஒரு கோயிலே கபளீகரம் ஆனதை பார்த்துள்ளோமா? தெரு ஓர பிள்ளையார் கோயிலோ, சாலையோர மாரியம்மன் கோயிலோ இல்லை. ஒரு மிகப்பெரிய வைணவ ஆலயம். அதுவும் சென்னைக்கு அருகாமையில் 50-60 கிலோ மீட்டர் தொலைவில். சற்றே வியப்பு. வரலாற்று சிறப்பு வாய்ந்த தக்கோலம் ஊர் தான் அது. இங்கே ஜலனாதீஸ்வரர் சிவாலயம் இருப்பது மட்டுமே பலருக்கு தெரியும். மீதம் 7 சிவாலயம் பல பேருக்கு தெரியாது. சரி தக்கோலம் சைவ கோயில் உள்ள ஊர் தானே. என்ன புது பிட்டா போடுரீங்க. கொஞ்சம் கண்ணீர் கதை தான். அந்த கதையின் நாயகன் மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்). பாடல் பெற்ற சைவ கோயிலை விட மிகப்பெரிய வைணவ ஆலயம். இந்த அழகு ராஜ பெருமாளுக்கு அழகிய ஐந்து நிலை கோபுரம் ஏதோ மிச்ச சொச்ச எச்சமாக நோய் வாய்ப்பட்டு இருந்தாலும், அடிபட்ட சிங்கம் போல் கம்பீரம் குறையாமல் காட்சி அளிக்கிறது. மூலவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. உற்சவர் ஜலனாதீஸ்வரர் கோயிலில் அடைக்கலம் புகுந்து விட்டார். கிட்டத்தட்ட தெரிந்தே 100 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர். சரி கோயில் கபளீகரம்னு தானே ஆராமிச்சோம். என்ன தான் ஆச்சி? என்ற கேள்விக்கு இப்படியெல்லாம் கூட ஆகுமா என்ற வியப்புக்குறியே விடையாய் கிடைக்கிறது. வழக்கம் போல் ஆலய தரிசனம் தொடர் ஓட்டுவோம். இருப்பது ராஜ கோபுரம் மட்டுமே, சுற்று மதில்கள் மாயமாகி பல வருடம் ஆகிற்று. உள்ளே நுழைந்தால் (வெளியூர் ஆட்கள் அவ்வளவு சீக்கிரம் நுழைய முடியாது என்றே சொல்லலாம்) அழகிய வெளிச்சுற்று பிரகாரம் என்று வாய் எடுப்பதற்கு வாய்ப்பு அங்கேயே மறுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 60 வீடுகள். அழகிய திருக்குளம், தெருக்குளமாக உருக்குலைந்து போய் உள்ளது. அழகிய மண்டபம் அலங்கோலமாய் காட்சி அளிக்கிறது. எந்த மன்னன் ரசித்து, ருசித்து கட்டினானோ தெரியவில்லை. கருவறை குமுத பட்டை முழுவதும் முத்து முத்தாய் கல்வெட்டுகள் சிதறி கிடக்கின்றன. பிழைப்பற்றவனுக்கு பொன்னேரியில் திருவிழாவாம். என்ன செய்வது சில வரலாற்று ரசனை வருத்தெடுக்கும் போது, இது போல் கிறுக்கு புத்தி போகத்தான் செய்கிறது. ஊர் மக்கள் சிலரை அனுகி, நிலைமை பற்றி விசாரிக்கும் போது சில கண்ணீர் கதைகள் குவிய துவங்கியது. சார். 40-50 வருஷத்துக்கு முன்னாடி… Flashback இது ஒரு அழகான வடகலை அக்ரஹாரம். இவர் உண்மையிலேயே பெயருக்கு ஏற்றார் போல் அழகு ராஜா தான். தின்பதற்கும் (பிரசாதம்), திருவிழாவிற்கும் எந்நேரமும் குறைவில்லை. சிறுக சிறுக கோயில் நிலங்கள் கை விட்டு போயிடுச்சு, சரியா பூஜை செய்ய முடில. கோயிலை நம்பி இருந்த நயனக்காரர், வண்ணார், பண்டாரம் சிறுக சிறுக வெளியேறிட்டாங்க. கோஷ்டி கோஷ்டியா இருந்த அந்தணர்கள், ஆங்காங்கே வயிற்று பிழைப்புக்கு புலம் பெயர்ந்துட்டாங்க. சின்னதா ஒரு குடிசை உள்ளே புகுந்தது. அந்த விஷ செடி இன்னைக்கு 60 மாடி வீடு முளைத்த வெட்டி எரிய பட வேண்டிய விருட்சமா(மரமாக) மாறிடுச்சு. எப்படியோ சிலர் முயற்சித்து பெருமாளை (சிவாலயத்தில் உள்ள உற்சவர்) புரட்டாசி மாதம் ஒரு சனிக்கிழமை அவர் சொந்த இடத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். வெறி கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் இரும்பு பைப் கொண்டு தாக்க தொடங்கி உள்ளனர். தோளிலே பெருமாள். பெருமாளை தங்குவதா? அடி கொடுத்தால் வாங்குவதா? தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுற்றி பார்த்து விட்டு திரும்பி விட்டார் பெருமாள். மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது கூட இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் கடந்த 40-50 வருட திருட்டு ஆட்சியில் சுரண்ட பட்டு இருக்கிறது. எப்படியோ வேலூர் கலெக்டர் வரை விஷயம் கசிய, கடந்த ஞாயிறு அன்று நான்கு காவலர்கள் உதவியுடன் பெருமாள் ஏலனப்பட்டு சுதர்சன யாகம் செய்து கொண்டார். 60 வீடுகளில், 50 வீட்டார் வன்னியர். நிலம் ஒத்துக்குவதாகவும், 3 லட்சம் பணம் தருவதாகவும் கூறியும், மீதம் உள்ள 10 துலுக்கர் பேச்சை கேட்டு காலி செய்ய மறுக்கின்றனர். முன்னோர்கள் அடேய் பாத்துகோடா நம்ம ஊர் பொக்கிஷம் என்று விட்டு சென்றதை, எப்படி விஷமமாய் ஒவ்வொரு ஊரிலும் விட்டுவிட்டோம். அல்ப பணத்திற்கா? டாம்பீக அரசியலுக்கா?
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தக்கோலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரக்கோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை