மகாஜனகுடி சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
மகாஜனகுடி சிவன்கோயில்,
மகாஜனகுடி, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612104.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவிடைமருதூர் கோயில் தெற்கு ரத வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து தென்புறம் செல்லும் சாலையில் சென்று தொடர்வண்டி பாதையை தாண்டியதும் மகாஜனகுடி கிராமம் தான். சிறிதாய் இரு தெருக்களுடன் உள்ள கிராமம். இங்கு மேற்கு பகுதியில் இரு சாலைகள் சந்திப்பில் உள்ளது இந்த சிவன் கோயில். பெரிய அரசமரத்தின் கீழ் கீற்று கொட்டகையில் சதுரவடிவ ஆவுடையார் கொண்டு அழகுடன் காட்சியளிக்கிறார் சிவன். எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. இக்கோயில் முன்பு இவ்விடத்தின் மேற்கில் உள்ள குளக்கரையில் இருந்ததாம் இக்கோயில். காலம் கட்டுமானங்களை கொண்டு சென்றுவிட இறைவன் மட்டும் இங்கிருக்கிறார். கால சக்கரம் சுழலும்போது மீண்டும் தனிக்கோயில் கொள்வார். இறைவனின் கோயிலை காக்க, இந்த அரசமரத்தில் ஒரு தலையில்லா சிவகணம் ஒன்று அமர்ந்துள்ளது போன்று இருக்கிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மகாஜனகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி