பெருங்காளூர் அகத்தீஸ்வரர் சிவன் கோயில்
முகவரி
பெருங்காளூர் அகத்தீஸ்வரர் சிவன் கோயில், பெருங்காளூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 622 203.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர்
அறிமுகம்
காட்டுமன்னார்கோயில்- கந்தகுமாரன் சென்று புத்தூர் சாலையில்நான்கு கிமி தூரம் சென்றால் உள்ளது பெருங்காளூர். காளம் என்ற சொல் சிவனையே குறிக்கும். பெரிய காளம் ஊர் என்பதே பெருங்காளூர் ஆகியிருக்கலாம். சிறிய கிராமம். இருப்பது இரு தெருக்கள் தாம். ஒரு குளக்கரையில் கருவேல காட்டில் ஆக்கிரமிப்புகளின் இடையில் உள்ளது இந்த சிறிய ஒற்றை கருவறை கோயில். சற்று பெரிய கோயிலாக இருந்து பின்னர் சிதிலமாகி ஒற்றை கருவறை கோயிலாக ஆகியிருக்கலாம். அகத்தியர் வழிபட்ட லிங்கமாதலால் இறைவன் பெயர் அகத்தீஸ்வரர். இறைவன் சன்னதியிலேயே அம்பிகை விநாயகர் ஆகியோர் உள்ளனர். அழகிய ஆறுமுகன் சிலை வெளியில் உடைந்து கிடக்கிறது. “வரவும்வழியில்லை வழிபடவும்ஆளில்லை கோயில்” இயல்புநிலைக்கு திரும்ப இவ்வழி செல்வோர் ஒருமுறை வந்துபாருங்கள். எறும்பு ஊர கல்லும் தேயும். பக்தர்கள் செல்ல செல்ல கோயிலுக்கு வழி கிடைக்காமலா போய்விடும்!! # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புத்தூர் சாலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி