பெரணமல்லூர் வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி
அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் – 604503.
இறைவன்
இறைவன்: வரதஆஞ்சநேயர்
அறிமுகம்
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூரில் அமைந்துள்ள வரத ஆஞ்சநேயர் கோயில் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொண்டைமண்டலத்தில் உள்ள பல்லவர் மற்றும் முற்கால சோழர்களின் முக்கிய இடங்களில் பெர்ணமல்லூர் ஒன்றாகும். சோழ மன்னர்கள் பழையாறைக்குச் செல்லும் போது இங்கு ஓய்வெடுக்கத் தங்கியிருந்ததால், சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திற்கும் இதுவே தலையாயது. இது முக்கியமாக கடந்த காலத்தில் சம்புராயர் மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
புராண முக்கியத்துவம்
மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள் அவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அங்கே அனுமன் சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். பின்னர் அருகேயிருந்த சிறுகுன்றின்மேல் ஊர் மக்கள் உதவியுடன் அனுமனை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. ஊரே அனுமனை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த அனுமனின் ஆற்றல் மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது.
நம்பிக்கைகள்
மன தைரியம் கிடைக்கவும், சனி தோஷங்கள் விலக, திருமணம், குழந்தைப்பேறு, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், நோயற்ற வாழ்வு வாழ இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
பொதுவாக திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரரை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவர். அதே போல் சிறு குன்றில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் வரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு. முக்கியமாக அமாவாசை நாளில் இங்கே கிரிவலம் வந்து அனுமனை வணங்கிச் சென்றால் மன தைரியம் கூடும்; சனி தோஷங்கள் விலகும்; திருமணம், குழந்தைப்பேறு, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், நோயற்ற வாழ்வு போன்ற நற்பலன்கள் நடக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவிழாக்கள்
அனுமன் ஜெயந்தி
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரணமல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆரணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை