பூலாங்குறிச்சி சிங்காரவேலன் திருக்கோயில், சிவகங்கை
முகவரி :
பூலாங்குறிச்சி சிங்காரவேலன் திருக்கோயில்,
பூலாங்குறிச்சி,
சிவகங்கை மாவட்டம் – 622407
இறைவன்:
சிங்காரவேலன்
இறைவி:
வள்ளி, தெய்வானை
அறிமுகம்:
பொன்னமராவதியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் பூலாங்குறிச்சி அமைந்துள்ளது. இங்கு சிங்காரவேலனுக்கு ஊரின் வடக்கே கிழக்கு மேற்காக உயர்ந்தோங்கி நிற்கும் மலைத்தொடரின் தெற்கு சரிவில் கலை அம்சத்துடன் காணப்படுகிறது பிரதான கோயில். நுழைவாசலில் மூன்று நிலை ராஜ கோபுரம் இருக்கிறது. கிழக்கில் சண்முகாநதி ஊருணி என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. மலை உச்சியில் பொழியும் மழை நீர் மற்றும் சூனைநீர் ஓடைகள் வழியே வழிந்தோடி குளத்திற்கு வந்து சேர, ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. நாற்புறமும் மதில் சூழ்ந்த கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பிரதான வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் முகமண்டபத்தில் முப்பத்தி இரண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றன. வள்ளி தெய்வானை சமேத சிங்காரவேலன், சகஸ்ரலிங்கம், மீனாட்சி அம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள், சண்முக விநாயகர், துர்க்கை, நவக்கிரகம், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், கருடாழ்வார் யோக தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன.
சிறப்பு அம்சங்கள்:
மூலவர் சிங்காரவேலன் சன்னதி வாசலில் ஜெயன் விஜயன் சிற்பங்கள், பலிபீடம், மயில் வாகனம் உள்ளன. சிங்காரவேலவர் அருகே வள்ளி தெய்வானை ஏற்றவண்ணம் அழகே உருவாக அருளே வடிவாக தரிசனம் தருகிறார். இவளை வணங்குவோர் வாழ்வில் என்றென்றும் சீரும் சிறப்புடன் நிறைந்திருக்கும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் தன் தேவியருடன் காட்சி அளிக்கிறார். இவரை வணங்குவோருக்கு செல்வ வளம் சேரும் என்பதும், பொன்னாலான நகைகள் பொருளும் சேரும் என்பது நம்பிக்கை. பொன்னும் பொருளும் சேர்ந்திட வேண்டும் மாதம்தோறும் கஷ்டத்தைத் அஷ்டமி தினத்தில் விரதம் ஆதரிப்போர் அனேகர்.
சகஸ்ரலிங்கம் சன்னதி முன்பு துவாரபாலகர்கள், பலிபீடம், நந்திதேவர், பீடம் உள்ளன. துர்க்கை அம்மன் சன்னதி வாசலில் தூவார சக்தியர சிற்பங்கள் உள்ளன. கிழக்கு சுற்றில் நவகிரக நாயகர்கள் தமது துணைவியருடன் தமக்குரிய வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றன. இந்த நவகிரக சன்னதியில் நம்பிக்கையோடு வழிபடுவதால் அவர்களுக்கு வெகு விரைவிலேயே திருமணம் நடைபெறுகிறதாம்.
இத்தலத்திலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை பயபக்தியுடன் வணங்கி வெளிநாடு செல்லும் வாய்ப்பினை பெற்று இருப்பதாக சொல்கிறார்கள். தம்பதியர் ஒற்றுமை நிலத்திட சகஸ்ர லிங்கத்தையும் மீனாட்சி அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர். தலவிருட்சம் அத்திமரம்.
தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ்வருடப்பிறப்பு, பவுர்ணமி தோறும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு கால அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடசேவை தரிசனம், நவராத்திரி, கொலு உற்சவம், கந்த சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு ஏகதின லட்சார்ச்சனை, புரட்டாசி இரண்டாம் சனி வாரத்தையொட்டி ஏகதின லட்சார்ச்சனையும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் சுழற்சி முறை ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஒரு ஆண்டுக்கு முருகனுக்கும் ஒரு ஆண்டு பெருமாளுக்கு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிழாக்கள்:
ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம் தோறும் 108 சங்காபிஷேகம், கார்த்திகை மகா தீப,ம் மார்கழி முப்பது நாள் திருப்பள்ளி எழுச்சி, ஆருத்ரா தரிசனம், தை பொங்கல், மாட்டுப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு ஆராதனை, மாசிமகம், பிரதோஷம், மாத சதுர்த்தியில் விநாயகர், வளர்பிறை, சஷ்டி, திதி மற்றும் கார்த்திகை நட்சத்திர நாளில் சிங்காரவேலனுக்கு சிறப்பு அபிஷேகமும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை வழிபாடு என பல்வேறு விழாக்களில் முறைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, ஆண்டு முழுவதும் அனேக உற்சவங்கள் இத்தலத்தில் கொண்டாடப்பட்டாலும் குறிப்பிடத்தக்க பெருவிழா வைகாசி விசாக திருவிழா ஆகும். இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் வைகாசி விசாகம் நாளில் சிங்காரவேலன் திருக்கல்யாணமும் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூலாங்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை