Friday Jun 28, 2024

பூந்துறை புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

முகவரி

பூந்துறை புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், பூந்துறை, ஈரோடு மாவட்டம் – 638115

இறைவன்

இறைவன்: புஷ்பவனேஸ்வரர் இறைவி: பாகம் பிரியாள்

அறிமுகம்

ஈரோட்டில் இருந்து அறச்சலூர் வழியாக தாராபுரம் செல்லும் பேருந்து சாலை வழியில் அறச்சலூர்க்கு முன்பாகவே ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பூந்துறை உள்ளது. ஈரோட்டில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. கோயில் வாசலிலேயே இறங்கலாம். அவல்பூந்துறை, பூந்துறை என்னும் இரு பெயர்களும் ஒன்றே. மக்கள் வழக்கில் பூந்துறை என்றே உள்ளது. இறைவன் புஷ்பவனேஸ்வரர் என்றும் இறைவி பாகம் பிரியாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கொங்கு நாட்டின் இலக்கியச் சிறப்பில் பூந்துறை நாடு மிக்க புகழ்பெற்றது. “மேன்மைபெறு பூந்துறை” – “பொன் மேவும் பூந்துறை” – “பொன்னுலகோர் புகழ்ந்திடும் பூந்துறை” என்றெல்லாம் புலவர்கள் இத்தலத்தைப் புகழ்ந்துள்ளனர். காளியண்ணப் புலவர் என்பவர் பூந்துறைப் புராணம் பாடியுள்ளார் இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள கொங்கு நாட்டு வைப்புத் தலமாகும். பிரகாரத்தில் தான்தோன்றீஸ்வர லிங்கம், தர்மசம்வர்த்தனி முதலிய சந்நிதிகள் உள்ளன. கோயில் வளாகத்துள் தென்னையும், பூச்செடிகளும் செழித்திருந்து பசுமையான சூழலைத் தருகின்றன. யாத்திரையாக வருபவர்கள் தங்கி இளைப்பாற வசதியாக கோயிலில் பெரிய மண்டபம் உள்ளது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அவல்பூந்துறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஈரோடு

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top