பு.ஆதிவராகநல்லூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
பு.ஆதிவராகநல்லூர் சிவன்கோயில்,
பு.ஆதிவராகநல்லூர், சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம் –
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
புவனகிரி – பு.முட்லூர் சாலையில் 5 கிமீ தொலைவிலும் பு.முட்லூரில் இருந்து மேற்கில் மூன்று கிமீ தொலைவிலும் ஆதிவராகநல்லூர் கிராமம் உள்ளது. பிரதான சாலையில் உள்ள நிறுத்தத்தில் இருந்து வடக்கில் உள்ளது கிராமம். பழமையான சிவன்கோயில் சிதைவடைந்து பின்னர் அதிலிருந்த லிங்கமூர்த்தியை மட்டும் எடுத்து கோயில் எடுப்பித்துள்ளனர். நாகர வடிவத்தில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. இறைவன் நடுத்தர அளவுடைய மூர்த்தியாக உள்ளார். இறைவன் எதிரில் உயர்ந்த மேடையில் அழகிய நந்தி உள்ளது. இறைவனும் நந்தியும் மட்டும் பழமையானவை. இறைவிக்கு தனியாக ஒரு சிறிய சன்னதி தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளார். படிக்கட்டின் ஓரம் ஒரு நாகர் உள்ளார். இறைவன் இறைவியின் பெயர் தெரியவில்லை. பல லட்சம் செலவு செய்து கோயில் எழுப்புவோர் இறைவனின் பெயரை எழுதாமல் விட்டுவிடுகின்றனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பு.ஆதிவராகநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி