புளியஞ்சேரி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
புளியஞ்சேரி விஸ்வநாதர் சிவன்கோயில்,
புளியஞ்சேரி, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612604.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையில் நாச்சியார்கோயில் அடுத்து உள்ள மாத்தூர்-அச்சுதமங்கலம் சாலையில் 9கிமீ-ல் உள்ள பிலவாடி வந்து பருத்தியூர் சாலையில் 1 கிமீ சென்று இடதுபுறம் திரும்பினால் புளியஞ்சேரி உள்ளது. அச்சுதமங்கலத்தில் இருந்தும் 10கிமீ தான். பல புளியஞ்சேரிகள் உள்ளதால் இவ்வூர் 27.புளியஞ்சேரி எனப்படுகிறது.
புளியஞ்சேரி என்பது முடிகொண்டான் ஆற்றி்ன்கரையோர கிராமம். மிக சிறிய கிராமம், 100வீடுகள் தான் இருக்கும். பெரிய குளம் ஒன்று அதனை சுற்றிய நான்கு தெருக்களும் உள்ளன. இந்த சின்ன கிராமத்தில் கைலாசநாதர் திருக்கோவிலும், விஸ்வநாதர் திருக்கோவிலும் அருகருகே அமைந்துள்ளது. இது வேறு எந்த கிராமத்திலும் காண முடியாத சிறப்பாகும்.
சுமார் 150ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள விக்கிரபாண்டியம் என்ற கிராமத்தில் வசித்து வந்த சங்கரய்யர் குடுமபத்தினரால் கட்டிவைக்கப்பட்டது. சங்கரய்யர் குடும்ப வாரிசுகள் இருந்தவரை கோவில் நித்தியபடி பூஜை மற்றும் திருவிழா நடைபெற ஏற்பாடுகள் செய்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகமும் செய்து வைத்துள்ளார்கள். அதன் பிறகு கோவிலை இந்து அறநிலையத்துறைஎடுத்துக்கொண்டது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புளியஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி