புண்டரீகவல்லி நீலமேகப்பெருமாள் திருக்கோயில், உத்தராகண்ட்
முகவரி
நீலமேகப் பெருமாள் திருக்கோயில் தேவப்ரயாகை கடிநகர், தெஹ்ரி-கார்வால் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலம்
இறைவன்
இறைவன்: நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) இறைவி: புண்டரீகவல்லி
அறிமுகம்
பத்ரிநாத் யாத்திரையில் ஹரிதுவாரில் இருந்து ரிஷிகேஷ்க்கு 24 கி.மீ. ரிஷிகேஷிலிருந்து மேலும் 70 கி.மீ. சென்றதும் முதலில் தட்டுப்படும் புண்ணியஸ்தலம் தேவபிரயாகைதான். பஸ் இறங்கினதும் ரகுநாத் ஜீமந்திர் என்று கேட்டால் வழிகாட்டுவார்கள். பள்ளத்தாக்கில் அலக்நந்தாவும், பாகீரதியும் சங்கமிக்கும் இடத்திற்கு (சுமார் 0, 25 கி.மீ.) நல்ல படிகள் உள்ளன. அவற்றின் வழி இறங்கினால் பாதி வழியில் இடப்பக்கம் மேற்படி திவ்யதேசம் உள்ளது. இப்பெருமாளை அங்குள்ளவர்கள் ரகுநாத்ஜீ என்கிறார்கள். சில படிகளேறி மேலே சென்று கோயில் கருவறையில் சங்கு சக்கரங்களுடன் நின்றபடி சேவை சாதிக்கும் பெருமாளை தரிசிக்கலாம். இருபுறமும் ஸ்ரீதேவி பூதேவி (சிறுஉருவங்கள்) உள்ளனர். கருவறையில் அன்ன பூரணி மற்றும் சிவலிங்கமும் காணப்படுகிறது. மூலத்தானத்திற்கு எதிரில் கருடாழ்வார் உள்ளார். இங்கே பத்ரிநாத். காலபைரவர், மகாதேவர், அனுமார் முதலியோர்களின் மூர்த்திகளும் உள்ளன. இங்குள்ள சிறிய மண்டபத்தில் விநாயகரும் காட்சி தருகின்றார். உற்சவர் லட்சுமண சீதா பிராட்டி சகிதரான இராமர். தரிசித்து விட்டு மேலும் கீழே இறங்குகையில் காசி விஸ்வேஸ்வரர், பார்வதி, நந்தி. கணநாதர் முதலியவர்களின் விக்ரகங்கள் உள்ளன. மேலும் கொஞ்சம் இறங்கி அலக்நந்தாவும் பாகீரதியும் உக்கிரமாக பாய்ந்தோடி வந்து சங்கமிக்கும் இடத்தை அடையலாம். இங்கிருந்து தான் மேற்படி நதியானவள் கங்காநதி என்றழைக்கப்படுகிறாளாம். இந்த சங்கம் இடத்தில் படிகளில் அமர்ந்து ஸ்நானம் செய்யலாம் (மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது மிக மிக அவசியம். ஏனென்றால் கங்கையின் பிரவாகம் அவ்வளவு உக்கிரமாக உள்ளது)
புராண முக்கியத்துவம்
தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறான். இறைவியின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும். தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன. விமானம் மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. இத்தலத்தில் கங்கை–யமுனை கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும்-ஆதிகங்கை சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது. இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.
சிறப்பு அம்சங்கள்
இரண்டு நதிகள் கூடுமிடம் பிரயாகை எனப்படும். இங்கு அளகநந்தா மற்றும் பாகீரதி நதிகள் சங்கமம் ஆகின்றன. பிரம்மதேவன் தேவர்களுக்கெல்லாம் தேவரான திருமாலைக் குறித்து இங்கு வேள்வி செய்ததால் தேவப்பிரயாகை என்று அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 1700 அடி. மூலவர் நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த ஸ்தலத்து மூலவரை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார். தாயாருக்கு புண்டரீகவல்லி என்பது திருநாமம். பரத்வாஜ முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம். பாரதப்போரில் பாண்டவர்கள் தங்களது சகோதரர்களைக் (கௌரவர்கள்) கொன்ற பாவத்தைப் போக்க, மார்க்கண்டேய முனிவர் அறிவுரைப்படி இங்கு வந்து பிரயாகையில் நீராடி பாப விமோசனம் பெற்றனர். இந்த ஸ்தலத்தில் வேள்வி செய்து, பரத்வாஜ முனிவர் சப்தரிஷிகளில் ஒருவரானார்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
உத்தராகண்ட் மாநிலம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரிஷிகேஷ்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ரிஷிகேஷ்
அருகிலுள்ள விமான நிலையம்
ஜாலி கிராண்ட்