பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கடலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ளது இந்த கிராமம், மங்கலம்பேட்டை- இடைசித்தூர்-பிஞ்சனூர் என வரவேண்டும். “பிறப்பறுக்கும் பிஞ்சகன்” எனும் வாசகம் கூறும் சிவனது பெயராக இந்த ஊர் பிஞ்சகனூர் என அழைக்கப்பட்டிருக்கலாம். சுற்றிலும் கருங்கல் துண்டுகள் கொண்டு அடுக்கப்பட்ட மதில் சுவர், நடுவில் செதுக்கப்படாத கருங்கல் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய கருவறை. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். பிரகாரத்தின் பின் புறம் விநாயகருக்கும் முருகனுக்கும் தனி தனி சிற்றாலயங்கள் தனியாக ஒரு சிலை வடபுறம் உள்ளது சற்றே சிதைந்த ஜேஷ்டாதேவியின் சிலை தான் அது. வேறு தெய்வங்கள் ஏதும் இல்லை. ஒரு கோயிலில் ஜேஷ்டா இருந்தாலே அது நிச்சயம் 4-6 ம் நூற்றாண்டை சேர்த்த ஒன்றாகவே இருத்தல் வேண்டும். இறைவன் சற்று நீண்டு உயர்ந்த பாணம் கொண்டு உள்ளார். தொடர் பூஜைகள் ஏதும் நடைபெறுவதாக தெரியவில்லை. காவிரி கரை கோயில்கள் போல் அழகுணர்வுடன் கட்டப்பட்ட கோயில்கள் இந்த மாவட்டத்தின் வடபகுதிகளில் இல்லை வறண்ட நிலம், எளிமையான கோயில்கள் முறையான பூஜைகள்,ஆகம விதிமுறைகள் இவைகளை இங்கு எதிர்பார்க்க முடியாது. காவிரி கரை கிராமங்கள் பல அழகான கோயில்களை சிதைய விட்டு கொண்டுள்ளதை மனம் ஏனோ இந்த இடத்தில் எண்ணி எண்ணி வருந்தியது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இடச்சித்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி