Thursday Nov 21, 2024

பாளையங்கோட்டை திரிபுராந்தகர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி

பாளையங்கோட்டை திரிபுராந்தகர் திருக்கோயில், திரிபுராந்தகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – 627002.

இறைவன்

இறைவன்: திரிபுராந்தகர் இறைவி: விசாலாட்சி

அறிமுகம்

பாளையங்கோட்டை திரிபுராந்தகர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். தற்போது திருநெல்வேலியில், பாளையங்கோட்டையில் உள்ள சிவாலயமே திரிபுராந்தகம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். சுவாமி – அம்பாள் இரு சந்நிதிகளும் தனித்தனி வெளிக் கோபுரங்களுடன் விளங்குகிறது. சுவாமி சந்நிதியில் முருகன் காட்சி தருகின்றார்; அவ்வாயிலின் முன்னால் ஒருபுறம் வீரவாகு தேவரும், மறுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர். அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது – வல்லபையுடன் விநாயகர் தரிசனத்தைக் காணலாம். இக்கோயிலில் உள்ள இறைவன் திரிபுராந்தகர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். திருச்சுற்றில் ஜ்வரஹரேசுவரர், சப்தமாதர்கள், அறுபத்துமூவர், மகா கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி சரஸ்வதி, சனீஸ்வரர், நடராச சபை, நவக்கிரகங்கள், கால பைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஜலதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாளையங்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாளையங்கோட்டை, திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top