பாபுசெட்டிகுளம் சோமநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
பாபுசெட்டிகுளம் சோமநாதர் சிவன்கோயில்,
பாபுசெட்டிகுளம், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
இறைவன்:
சோமநாதர்
இறைவி:
சங்கரநாயகி
அறிமுகம்:
கும்பகோணம் பாலக்கரை வழியாக கொட்டையூர் வரும் வழியில் ஏரகரம் சாலை வலது புறம் திரும்புகிறது அந்த இடத்தினை தாண்டியதும் இடதுபுறம் சிறிய தெரு திரும்பும் அது தான் விவேகானந்தா தெரு அதில் தான் இந்த பாபுசெட்டிகுளம் சிவன் கோயில் உள்ளது. நெருக்கமான குடிசைபகுதி , அதில் உள்ளது இந்த சின்ன கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் சோமநாதர் தெற்கு நோக்கிய இறைவி சங்கரநாயகி இறைவன் எதிரில் சிறிய நந்தி உள்ளது பழமையான காவிரிக்கரை கோயில் சிதைந்து போனபின் இப்பகுதி மக்கள் உருவாக்கிய கோயில் இது. இரு சன்னதிகளும், ஒரு லிங்க பாணமும், சண்டேசரும் உள்ளனர் அவ்வளவுதான். இருந்தாலும் இப்பகுதி மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் இந்த இறைவன்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாபுசெட்டிகுளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி