Tuesday Dec 03, 2024

பானம்பாக்கம் ஜனமேஜெயஈஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி :

ஜனமேஜெய ஈஸ்வரர் திருக்கோயில்,

செஞ்சி பானம்பாக்கம், கடம்பத்தூர் வட்டம்,

திருவள்ளூர் மாவட்டம் – 631203.

போன்: +91 97913 29434 

இறைவன்:

ஜனமேஜெய ஈஸ்வரர்

இறைவி:

காமாசி

அறிமுகம்:

சென்னை அரக்கோணம் இரயில் மார்க்கத்தில், செஞ்சி பானம்பாக்கம் இரயில் நிலையத்தின் 3 கி.மீ அருகில் கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 குரு க்ஷேத்திரத்தை ஆண்ட மன்னன் பரீட்சித்து மகாராஜா. அஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்தை யுதிஷ்டிரனுக்கு பின்னால் அலங்கரித்தவன். வேதங்களைக தொகுக்கக் காரணமாயிருந்தவன். ஜனமேஜயனின் தந்தை. பரீட்சித்து மகாராஜனுக்கு நான்கு குமாரர்கள். ஜனமேஜயன், பீமசேனன், உக்ர சேனன் மற்றும் ஸ்ருதசேனன். அனைவரும் அஸ்வேத யாகம் மேற்கொண்டனர்.

24 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தவர்.   சாபத்தினால் தக்ஷசீல நாட்டு நாகராஜன் தக்ஷகனினால் தீண்டப்பட்டு தனது அறுபதாவது வயதில் தீண்டப்பட்டு மாண்டார். இதனால் பெரும் கோபமுற்ற பரீட்சித்து மகராஜனின் மகன் ஜனமேஜயன் தக்ஷகனை ஒரே வாரத்தில் கொல்ல வேண்டும் என்ற சபதம் செய்தார்.

அதன்படி சர்ப்ப மேத யாகம் செய்யத் திட்டமிட்டான். ஈரேழு உலகத்தில் உள்ள அனைத்து சர்ப்ங்களையும் ஹோம குண்டத்தில் விழச் செய்து மாளச் செய்வதே இந்த யாகத்தின் நோக்கமாகும். அதில் தக்ஷகன் என்னும் பாம்பு சூரியனின் தேர்ச் சக்கரத்தைப் பற்றிக் கொண்டது. அதனால் சூரியன் தன் தேரோடு சென்று ஹோம குண்டத்தில் விழும் அபாயமும் ஏற்பட்டது. அவ்வாறாக நிகழ்ந்தால் பூவுலகே இருளில் மூழ்கி அழிந்து விடுமோ என்று பிரார்த்திக்க சுக்ல பக்ஷ பஞ்சமி நாளான அன்று அதற்க்கும் விடிவு ஏற்பட்டு ஆவணி மாதத்தில் இன்றும் அது நாக பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு செய்த யாகத்திலிருந்து கார்கோடகனும் தப்பித்து சிவன் பின்னால்  சென்று ஒளிந்து கொண்டான். அவனைத் தாக்க ஜனமேஜயன் முற்பட்ட போது சிவனிடம் தஞ்சம் புகுந்து காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவனது வேண்டுதலை ஏற்று கார்கோடகனை ஜனமேஜயனிடமிருந்து காப்பாற்றுகிறார். உலகெங்கிலும் உள்ள சர்ப்பங்கள் அவன் நிகழ்த்திய யாக குண்டத்தில் விழுந்து மாண்டு விட்டன. இருப்பினும் ஒரு பாவமும் அறியாத தனக்கு அழிவு ஏற்படாமல் காக்க வேண்டும் அதற்கு கைமாறாக இத்தலத்தில் எவரையும் நான் தீண்டமாட்டேன், அப்படியே தீண்டினாலும் எவரையும் விஷம் அண்டாது என்று சத்தியமும் செய்தது.

ஜனமேஜயன் இந்தப் பாவத்திலிருந்து தனக்கு விமோசனம் “பெறவும் தான் அழிக்க முற்பட்ட கார்கோடகனே சிவனிடம் தஞ்சம் புகுந்ததை உணர்கிறான். இந்த இதிகாசப் பின்னணியுடனே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமான் ஜனமேஜெய ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டுள்ளார். அதனால் சர்ப்ப தோஷத்தால் பீடிக்கப்பட்டு, சர்ப்பதோஷ நிவர்த்திகக்காக  பல ஆலயங்களை எழுப்பினான்.

நம்பிக்கைகள்:

ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷம், இராகு கேது தோஷம் நீங்க இத்தலத்துத் ஈசனை வணங்க வேண்டும். பித்ரு சாப நிவர்த்தி கிட்டும். ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை வழிபட கணவன் மனைவியிடையே அன்பு பெருகி. ஒற்றுமை ஏற்படும். பானம்பாக்கம் ஸ்ரீ –ஹரிஹரேசுவரரில் மகா விஷ்ணுவை வழிபட ஆரோக்கியம் வளரும்.

சிறப்பு அம்சங்கள்:

சுவாமி 16 பட்டைகளுடன் நாகாபரணம் கொண்டு மிளிரும் வண்ணம் உள்ளார். அம்பாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். விநாயகர் ஆலய வெளிச்சுற்றில் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஜடாமுடி விரிய நான்கு கரங்களுடன் கல்லால மரத்துடன் இடக் காலை மடக்கி வைத்தவாறு காட்சி தருகிறார். தாராசுரம் போன்று நந்தியம் பெருமான் உயர்ந்து சிவனின் நேரடி பார்வையினைப் பார்த்த வண்ணம் உள்ளார்.

திருவிழாக்கள்:

சிவராத்திரி. பிரதோஷம் வழிபாடுகள்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பானம்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செஞ்சி பானம்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top