Saturday Nov 23, 2024

பாசிபட்டினம் பாசியம்மன் கோயில், இராமநாதபுரம்

முகவரி :

பாசிபட்டினம் பாசியம்மன் கோயில், இராமநாதபுரம்

பாசிபட்டினம் கிராமம்,

ராமநாதபுரம் மாவட்டம்,

தமிழ்நாடு 623401

இறைவி:

பாசியம்மன்

அறிமுகம்:

                ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இயற்கைத் துறைமுகமான தொண்டி அருகில் இருக்கும் பாசிப்பட்டினம், கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது. இந்த ஊர் பாசியாற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இதன் கடற்கரை அருகில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோயில் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் உள்ள இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது.

பாசியம்மன் கோயிலின் முன்புறத் தோற்றம் இப்பகுதிகளில் சோழநாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிங்களப்படையிடம் தோற்றுப்போன பாசிப்பட்டினத்தில், தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டுக்கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு ஒரு கோயிலை கி.பி.1168க்குப் பின் சோழர்கள் கட்டியுள்ளனர். 850 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் மேற்பகுதியில் மரங்கள் வளர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 விமானத்தின் அதிஷ்டானம் ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை என பாதபந்த அதிஷ்டானமாக அமைந்துள்ளது. அடுத்து வேதிகையும், இதன் மேல் அமைந்த பாதசுவரில் கோட்ட பஞ்சரங்களும், அரைத்தூண்களும், தேவகோட்டங்களும் காணப்படுகின்றன. பிரஸ்தரம் வரை முழுவதும் கருங்கற்கற்களாலும், அதற்கு மேல் தளம், கிரீவம், சிகரம் ஆகியவை செங்கல், சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டுள்ளன.

மதுரையை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்டு கொண்டிருந்த குலசேகரப் பாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செய்வதில் நடந்த போரின்போது, கி.பி1168இல் பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரம பாகுவின் படையும், குலசேகரப் பாண்டியனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ராஜாதிராஜ சோழன் படையும் தொண்டி பாசிபட்டினத்தில் போரிட்டதாக ஆர்ப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இப்போரில் சோழர்கள் தோற்றனர். பின்பு நடந்த போர்களில் சிங்களப்படையை சோழர்கள் வென்றனர். சோழநாட்டின் எல்லையான சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது.

காலம்

850 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாசிபட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top