Friday Jan 03, 2025

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி (மிதுன ராசி) திருக்கோயில், திண்டுக்கல்

முகவரி

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம்- – 624 601, தொலைபேசி: +91-4545 – 242 293, 242 236, 242 493.

இறைவன்

இறைவன்: திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுதர்

அறிமுகம்

12 ராசிகளில் 3வது ராசி மிதுனம். இதற்கான கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் ஆகும். ஞானப்பழத்திற்காக அம்மை அப்பனுடன் கோபம் கொண்டு ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் அமர்ந்த இடம்தான் பழனி. 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் நவபாசாணம் கொண்டு தயாரிக்கப்பட்டது மூலவர் சிலை.. இந்த புனித பூமியில் முருகனுக்கு செய்யப்படும் பாலாபிஷேகமும், பஞ்சாமிர்த அபிஷேகமும் எல்லா வித வியாதிகளையும் குணப்படுத்துவதாக ஐதீகம். இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில். இக்கோயில் மிதுன ராசிக்கு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது. பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் “போகர்” சித்தரும் ஒருவர். அஷ்டமா சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவமியற்ற வந்த போது, அன்னை பார்வதி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான “அகத்தியர்” ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு “நவபாஷாண சிலை” வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். மிக அற்புதமான இந்த நவபாஷாண சிலையை மக்களின் நன்மைக்காக இறைவனின் உத்தரவின் பேரில் செய்தார் போகமுனிவர். இந்த நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படும் சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாக பெற்று சாப்பிடும் பக்தர்களின் எப்படிப்பட்ட உடல் நோய்களையும் தீர்க்கும் தெய்வீக சக்தி கொண்டது. இந்த பழனி மலையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனி சந்நிதி இருக்கிறது. இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. “திருப்புகழ்” எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம். பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த “இடும்பன்” எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் “சக்திகிரி,சிவகிரி” என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது இந்த பழனி மலையில் தான் தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகபெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது. முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் பக்தனானான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை உண்டானது. இந்த பழனி மலை முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.

சிறப்பு அம்சங்கள்

இராசி எண்: 3 வகை: காற்று இறைவன்: புதன் ஆங்கில பெயர்: ஜெமினி சமஸ்கிருத பெயர்: மிதுனம் சமஸ்கிருத பெயரின் அர்த்தம்: இரட்டையர்கள் இந்த மக்கள் ஆன்மீக மற்றும் மிகவும் பகுப்பாய்வு மனதில் இருப்பார்கள். கலை மற்றும் இலக்கியம் இந்த நபர்களை கவர்ந்திழுக்கிறது. அவர்கள் பல்துறை, சொற்பொழிவு மற்றும் கண்டுபிடிப்புடன் இருப்பார்கள், மேலும் வணிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் இரண்டு வெவ்வேறு துறைகளில் பிஸியாக இருப்பார்கள். இந்த அடையாளத்தின் நபருக்கு அறிவார்ந்த சாதனைகள் இருக்கும். அவர் தனது உறவினர்கள் மூலம் ஆதாயங்களைப் பெறுவார். பொதுமக்களின் பாராட்டைப் பெறும். செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஜாதகத்தை பாதித்தால், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அதிக சிரமம் இருக்கும். நபருக்கு பலவிதமான ஆர்வங்கள் இருக்கும். ஒழுங்கற்ற பாலியல் பழக்கம் அவர்களின் பலவீனம். இந்த மக்கள் நிமோனியா, ப்ளூரிசி, ஆஸ்துமா மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். நல்ல தாசங்கள்: செவ்வாய், ராகு மற்றும் கேது. மோசமான தசைகள்: புதன், வியாழன், சூரியன் மற்றும் செவ்வாய்

திருவிழாக்கள்

மே-ஜூன் மாதங்களில் வைகாசி விசாகம், அக்டோபர்-நவம்பரில் ஐப்பசி ஸ்கந்த சஷ்டி, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் திருக்கார்த்திகை, ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தைப்பூசம் மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பங்குனி உத்திரம் ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பழனி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top