பள்ளிவாரமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பள்ளிவாரமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில்,
பள்ளிவாரமங்கலம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சி அம்மன்
அறிமுகம்:
திருவாரூர் தேரடியில் இருந்து வடகிழக்கு மூலையில் செல்லும் தெருவில் நுழைந்து கேக்கரை வழியாக 5 கிமீ தூரம் சென்றால் பள்ளிவாரமங்கலம். வெட்டாற்றின் மேற்கு கரையில் இவ்வூர் அமைந்துள்ளது திருபள்ளியின்முக்கூடல் என்ற பாடல் பெற்ற தலமும் அருகில் தான் உள்ளது. அழகான சின்ன ஊர்தான், ஊரின் கிழக்கு பக்கம் இந்த சிவன்கோயில் அமைந்துள்ளது. பல காலமாக பழுதடைந்து இருந்த இக்கோயில் மீண்டும் சில வருடங்களின் முன்னர் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இறைவன் – கைலாசநாதர் இறைவி – காமாட்சி அம்மன்.
கிழக்கு நோக்கிய இறைவன், இறைவி தெற்கு நோக்கி உள்ளார். முகப்பில் பெரிய மண்டபம் உள்ளது அதன் சுவர்களில் பல புராண கதைகளை சுதைகளாக்கி உள்ளனர். பார்க்க நன்றாக உள்ளது. இந்த மண்டபத்தின் வெளியில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் பாலமுருகனும் உள்ளனர், நந்தி மண்டபம் மேலே தகர கொட்டகையாக உள்ளது இப்பகுதி இன்னும் சரியாக பூசி முடிக்கப்படவில்லை. உதவிக்கு காத்திருக்கிறார் நந்திஎம்பெருமான். பிரகாரம் சுற்றி வரும் போது கருவறை கோட்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை ஆகியோர் சிறிய சிலைகளாக காட்சி தருகின்றனர். கருவறை பிரகார பகுதியில் ஒரு தனி மாடத்தில் ஐயனார் உள்ளார். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். நவகிரகம், ஒரு தனி லிங்கம் பைரவர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். போதிய பராமரிப்பின்றி விமான பகுதிகளில் செடிகள் முளைத்துள்ளன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பள்ளிவாரமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி