Friday Nov 22, 2024

பத்தக்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :

பத்தக்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்

பத்தக்குடி, திருநள்ளாறு கொம்யூன்,

காரைக்கால் மாவட்டம் – 609607.

இறைவன்:

அகத்தீஸ்வரர்

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

திருநள்ளாறு – செருமாவிலங்கை சாலையில் சென்று செருமாவிலங்கை பேருந்து நிறுத்தத்தை ஒட்டி செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் பத்தக்குடி அடையலாம். சமண மத அடையாளங்கள் இப்பகுதியில் காணப்படுவதால் இவ்வூர் புத்தன்குடி எனப்பட்டு தற்போது பத்தகுடி ஆகியுள்ளது எனலாம். ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கிய பெரிய சிவாலயம் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி- அகிலாண்டேஸ்வரி ஓங்கி உயர்ந்த மதில் சுவரில் சுதை அலங்காரம் செய்யப்பட நுழைவாயில் உள்ளது. அடுத்து அழகிய மண்டபத்தில் நந்தி தேவர் இறைவனை நோக்கி அமர்ந்துள்ளார் இறைவன் கருவறை செங்கல் தளியாக அமைக்கப்பட்டுள்ளது இறைவன் சன்னதி வாயிலில் பழமையான விநாயகர் சிலை ஒன்றுள்ளது, இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இரு கருவறைகளையும் ஒரு பதினாறுகால் கருங்கல் மண்டபம் இணைத்து அழகூட்டுகிறது. இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார் இறைவி பெரிய அளவிலான சிலையாக உள்ளார்.

கருவறை கோஷ்டத்தில் மிக அழகியதொரு தக்ஷணமூர்த்தி கட்டுமலை மீது உள்ளார் அவரது காலடியில் முயலகனும், பெரிய கொண்டையுடன் வணங்கிய நிலையில் ஒரு பெண்ணொருத்தி நிற்பது வியப்புக்குரியது, இதற்க்கான கதை என்னவென விளங்கவில்லை. கருவறை கோட்டத்தில் நேர் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் லிங்கபாணம் ஒன்றை நிலை நிறுத்தி உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக தென்மேற்கில் விநாயகர் கோயில் பிரஸ்தரம் வரை கருங்கல்லும் அதற்கு மேல் விமானம் செங்கல் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

முருகன் சன்னதியில் முகப்பு மண்டபம் ஒன்று முன்னிழுக்கப்பட்டுளது. முருகன் வள்ளி தெய்வானை பெரிய அளவிலான மூர்த்திகளாக உள்ளனர். வடமேற்கில் மகாலட்சுமி சன்னதி கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதனை ஒட்டி சரஸ்வதி சன்னதி செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. பெரிய வில்வமரம் ஒன்று வளர்ந்து நிற்கிறது. வடகிழக்கில் நவக்கிரக மண்டபமும், நீண்ட மண்டபத்தில் பைரவர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் சிலைகள் வரிசையாக பார்க்க மிக அழகாக உள்ளன, அருகில் அகத்தியர் ஆஞ்சநேயர் சனீஸ்வரர் மற்றும் மாரி சிலைகள் உள்ளன. வில்வமரத்தடியில் பல சிதைவடைந்த சிலைகள் உள்ளன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பத்தக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்கால்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top