நொச்சிக்காட்டு வலசு முனியப்ப சுவாமி திருக்கோயில், ஈரோடு
முகவரி :
நொச்சிக்காட்டு வலசு முனியப்ப சுவாமி திருக்கோயில்,
நொச்சிக்காட்டு,
ஈரோடு மாவட்டம் – 638002.
இறைவன்:
முனியப்ப சுவாமி
அறிமுகம்:
ஈரோடு மாவட்டத்தில் நொச்சிக்காட்டு வலசு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான முனியப்பசாமி கோயில் உள்ளது. அக்காலத்தில் நொச்சி மரங்கள் அதிகமாக காணப்பட்ட இப்பகுதியில் குடியிருப்புகள் உருவானபோது நொச்சிக்காட்டு வலசு என பெயர் வந்தது. மேலும் தற்போது கோயில் உள்ள இடத்தில் முன்னர் வெள்ளை பாறைகள் இருந்தன அவற்றை வெட்டி எடுத்து ஆலயம் அமைக்கப்பட்டதால் இங்கு அருளும் முனீஸ்வரன் வெள்ளை முனியப்ப சுவாமி என்று அழைக்கப்படுகிறார். ஈரோட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
புராண முக்கியத்துவம் :
கிழக்கு நோக்கிய கோயில் மதில் சுவரில் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன. பாரம்பரிய உடை அணிந்து சுவாமி தரிசனம் செய் செய்ய வாருங்கள் என்ற வாசகங்கள் வாயிலில் எழுதப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் குழந்தைப்பேறு வேண்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 5கல் ஊஞ்சல்கள், வேல்களும், வலது புறம் சுமார் 30 அடி உயரமுள்ள மூன்று குதிரை வாகனங்களும் காணப்படுகின்றன. அதன்கீழ் சிறுவர் முதல் பெரியோர் வரை ஏராளமான உருவங்கள் உள்ளன. இவை தங்கள் குறை தீர்த்ததால் முனியப்ப சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டவை. இடது புறம் இரண்டு குதிரைகள், இரண்டு மாடுகளின் பிரம்மாண்டமான சுதை வடிவங்கள் காட்சி தருகின்றனர். இதன் கீழேயும் மனிதர்களில் சுதை உருவங்கள் காணப்படுகின்றன. தற்சமயம் இடப்பற்றாக்குறை காரணமாக இத்தகைய காணிக்கைகளை வழங்க அனுமதிப்பதில்லை.
நம்பிக்கைகள்:
மகப்பேறு கிட்ட, வீடு, வாகனம் அமைய, நோய்நொடி நீங்கி தொழில் வளர்ச்சி அடைய, காரிய தடை விலக, இவரை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். குறிப்பாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலது கையில் சிவப்பு கயிறு கட்டப்பட்டு இருக்கிறது. அதனால் ஆரோக்கியத்தில் அபிவிருத்தி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. நிறைவேறிய பக்தர்கள் முனியப்ப சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து கோயிலில் தனியாக இருக்கும் மகாமுனி காணிக்கையாக ஆடு கோழி தந்து தங்களின் நன்றியை தெரிவிக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
கோயிலின் நடுநாயகமாக மூன்று முனியப்பசாமிகள் எழுந்தருளியுள்ளனர். நடுவில் உள்ள சிலைக்கு கீழே சுயம்பு முனியப்ப சுவாமியும், இடதுபுறம் ஒண்டிவீரன், கன்னிமாரும், வலதுபுறம் கருப்பராயன் அருள்பாலிக்கின்றனர். அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு முனியப்ப சாமிக்கு நடத்தப்படுகின்றன. தென்மேற்கில் கற்பக விநாயகருக்கு தனிசன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் பழமையான ஆயமரம் என்ற ஒரு வகை மரம் உள்ளது. இறைஅம்சம் நிறைந்த இதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பக்தர்கள் பூஜிக்கிறார்கள். மேலும் அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
திருவிழாக்கள்:
தினசரி பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் முனியப்ப சாமிக்கு நடைபெறுகின்றன. குறிப்பாக ஆடி பதினெட்டு தொடர்ந்து காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பொங்கல் விழா விமரிசையாக நடைபெறுகிறது.
காலம்
300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நொச்சிக்காட்டு வலசு
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்