நெல்லிக்குப்பம் மேல்பாதி சிவன்கோயில், கடலூர்
முகவரி :
நெல்லிக்குப்பம் மேல்பாதி சிவன்கோயில்,
நெல்லிக்குப்பம், பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607105.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கடலூரில் இருந்து மேற்கில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது நெல்லிக்குப்பம். இவ்வூரின் தெற்கில் உள்ளது இந்த மேல்பாதி. நெல்லிக்குப்பம் ‘இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை சாலை வழி இரண்டு கிமீ சென்றால் ஊரின் முகப்பிலேயே உள்ளது இந்த சிவன்கோயில். பழம் பெருமை வாய்ந்த எய்தனூரின் மேற்கில் இருப்பதால் இவ்வூர் மேல்பாதி எனப்படுகிறது எனலாம். ஒரு தனித்த பெரிய லிங்க மூர்த்திக்கு ஒற்றை கருவறையாக விமானம் இன்றி ஒரு பெரிய அறை போல கட்டி அதன் முகப்பில் இறைவன் இறைவி சுதை பணிகள் செய்துள்ளனர். இதன் பக்கத்திலேயே முருகனும் வள்ளி தெய்வானையுடன் தனி கோயில் கொண்டுள்ளார். இரு கோயில்களின் இடையில் நவக்கிரக மண்டபமும் ஆஞ்சநேயர் மண்டபமும் உள்ளன. இதே தெருவில் ஒரு விநாயகர் கோயில் ஒன்றும், மாரியம்மன் கோயில் ஒன்றும் உள்ளன. எய்தனூர் பெருங்கோயிலின் பிரிந்து போன மூர்த்தியாகலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெல்லிக்குப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நெல்லிக்குப்பம், பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி